(168
அப்பாத்துரையம் - 24
பேசினான். பிந்திய செய்தி என்னைப் புண்படுத்திற்று. “நீ போய் விட்டால் நான் என்ன செய்வேன்?” என்று கேட்டேன்.
“உன்னையும் என்னுடன் அழைத்துக்கொண்டு போகிறேன்.” “என் தந்தை?”
66
அவரை விட்டு நீ விலகுவது தான் உனக்கும் நல்லது. அவருக்கும் நல்லது”
டேவிடின் பாசம் எனக்குப் பெரிது. தந்தையிடம் எனக்கு அவ்வளவு பாசம் கிடையாது. ஆயினும் அவரைப் பிரிந்து செல்வது எப்படி என்று தயங்கிப் பேசாமலிருந்தேன்.
"மேலும் எப்போதும் நீ தந்தையுடனே இருக்க முடியுமா? நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாமா?' என்று அவன் மீண்டும் தன் கோட்பாட்டுக்கு உறுதி தேடினான்.
நான் பேச்சைமாற்ற "நீ எப்போது மணம் செய்து கொள்வாய்?" என்று கேட்டேன்.
66
"தந்தையுடன் சென்று நான் ஒரு நல்ல பதவி பெற்று விடுவேன். அதன்பின் காலதாமதமின்றி உடனே மணம் புரிந்து கொள்வேன்"
“அவ்வளவு திடீரென்றா?”
“ஆம், ஏன்?”
66
மனைவியாக ஒரு
பெண்ணைத் தேர்ந்தெடுக்க
வேண்டாமா?"
"பெண்ணா? அது தான் ஏற்கனவே தேர்ந்து வைத்து
விட்டேனே!”
66
66
`அது யார்?”
இன்னும் இது தெரியாமலா இருக்கிறாய். சுத்தப் பைத்தியம். அது தான் ரயீஸா!"
இளைஞனாக வளர்ந்தும் இன்னும் குழந்தையாயிருந்த என் உள்ளத்தில் ஒரு மின்னொளி பாய்ந்து பரந்தது. டேவிடின் வாழ்க்கைத் திட்பத்துக்குரிய மூல ஆற்றல், இதோ, இப்போது