பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

அப்பாத்துரையம் - 24

இத்தொனி சந்தர்ப்பக் கேடானதென்று வெல்ச்சானி னாவுக்குப் பட்டது.

"இப்போது இரவு மணி மூன்று. ஏற்கனவே நீங்கள் வந்து கதவு தாழிடப்பட்டிருக்கிறதா, டிருக்கிறதா, இல்லையா என்று தட்டிச் சோதித்திருக்கிறீர்கள்" என்றான்.

பாவ்லோவ்ஸ்கி சிறிது நடுங்கினான். பின் படபடத்து அங்குமிங்கும் கண் சுழற்றினான். இறுதியில் நகைத்துப் பசப்பிக்

காண்டு ஒருவாறு சமாளித்தான். "அது சரியே. பார்க்க வேண்டுமா, பார்க்கலாமா என்ற தயக்கத்தில் பல நாள் சுழித்திருக்கிறேன். என்னை முதன் முதலில் நீங்கள் தான் அடையாளம் கண்டீர்கள். மூன்று வாரமாக இப்பக்கம் தான் சுற்றுகிறேன். எனக் கு உங்களைப்போன்ற நண்பர்கள் அதிகமில்லை. என் மனநிலையில் நான் இனி நகரிலேயே தான் இருக்க வேண்டும்”

“என்ன மனநிலை?"

“இதோ!”-அவன் கறுப்பு நாடாவைச் சுட்டிக் காட்டினான். வெல்ச்சானினாவ் உள்ளத்தில் மீண்டும் ஒரு மின்னல்!

பாவ்லோவ் ஸ்கியின் மனைவி

-

நடல்யா வாஸிலியேவ்னா- அவளாயிருக்கக் கூடுமா? மனத்தின் கேள்வி அவன் வாய் வழியே உரக்கப் பாய்ந்துவிட்டது.

"ஆம். அவளேதான். சென்ற மார்ச் மாதம் எலும்புருக்கி நோய். இரண்டு மூன்று மாதமாக ஒரே படுக்கை. இப்போது அவளில்லை. நான்தான் இருக்கிறேன்”

பாவ்லோவ்ஸ்கி நல்லவன். மிகவும் நல்லவனாகத்தான் இருந்தான். நடல்யா அவன் மனைவி. உணர்ச்சியற்ற வெல்ச்சானி னாவிடம் அவளைக் கவர ஏதோ கவர்ச்சியிருந்திருக்கவேண்டும். அவன் நடல்யாவின் வட்ட மதிமுகத்தில், அவண் அமைந்த இன்பத் துடிப்பில், விண்மீனொளியைக் கேலிசெய்த அவள் கண்ணொளியில் ஈடுபட்டு, முதல் தடவையாகத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டான். அவள் தன் கணவனுக்கு அப்பழுக்கற்ற மனைவியாகவும் அதே சமயம் அவனுக்கு உணர்ச்சி என்னும் வான்முகட்டில் இருந்து நடனமிடும் காதல்