202
அப்பாத்துரையம் - 24
விரும்பினேன். அதில் நான் வெற்றியடைந்தேனா, இல்லையா? என் கதை. நான் அதற்கு விடை தர வேண்டும்!
என் இல்லத்தில் அவள் வரவு மதிப்புத் தரும் என்று காட்டவே நான் என் சிறுமைகளைக் கூறினேன். அவள் நிலைமை தெரிந்துதான் அவளிடம் காதல் கொள்ளத் துணிந்தேன் என்றும் கூறினேன்.
அவள் இணங்கினாள். தயங்கித் தயங்கி- ஆனால் இறுதியில், “சரி” என்றாள்.
சிற்றன்னையர் என்னை மதித்தனர். வணிகனிடம் எதிர்பார்த்ததை விட, அவன் கொடுத்திருக்கக் கூடியதை விடப் பன்மடங்கு நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவள் தற்பெருமையுடையவள் என்று அவர்கள் எச்சரித்தனர். அதை நான் விரும்பும் பெண்ணுக்குரிய ஒரு உயர்பண்பு என்று கருதுகிறேன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?
அவள் தயங்கிக் கொண்டே, “ஆம்" என்றாள். இது தற்பெருமை தான். ஆனால் தயங்காதிருந்தால் நான் அவளை அவ்வளவு உயர்வாக எப்படி மதிக்கமுடியும்? அவளை நான் பெறத் துடிக்கவில்லை. அவள் உயர்வு காணத்துடித்தேன். என் உயர்வு காட்டத் துடிக்கவில்லை. காணத் தாமதிக்குந் தோறும் அதன் விலை உயரும் என்று கருதினேன்.
நான்
உயர்த்தினேன்; படுகுழியிலிருந்து தூக்கி நிறுத்தினேன். இதைநான் கூறவில்லை- செயலால் அறியச் செய்தேன். திருமணத்தை அவள் பகட்டாரவார சமூக மணமாக்க எண்ணியிருந்தாள். இரண்டு சான்றாளர்களுடன் நாங்கள் நால்வராக நின்று பதிவுத் திருமணம் ஆக்கி நான் வெற்றி கண்டேன்.
என் கோட்பாடுகளை அவள் பண்பாக்க எண்ணினேன். அதற்காக அவளுக்கு அவற்றை எடுத்து விளக்கினேன். அவள் அவற்றை நன்கு தெரியாமலிருந்திருக்க முடியாது.
அவள் பணத்தைச் செலவு செய்ய விரும்பினாள். நான் அதன் விலையை அவளுக்கு எடுத்துக் காட்டினேன், காட்ட எண்ணினேன். நானும் அவளைப் போல ஏழைதான்.