பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

“கண்கவரும் காலை அழகு வெள் ளொளியினிலே, நுண்பனித் துளிகளெலாம் சுடரிடுகின்றனவே! நுண்பனித் துளிகளெலாம் வெங்கதிரோன் சாடாமே, நண்பினொடு மழைபொழிய வாராயோ நன்முகிலே! ஒண்பவள மலர்தழைப்ப வாராயோ தண்முகிலே!”

219

அஸோஜிரோ தந்த புது விருந்தில் மியூகி ஈடுபட்டு அதைப் பருகினாள். கவிதையின் மாய அழகில் மறைந்துலவும் காதல் குறிப்பினையும் அவள் கூரிய அறிவு கண்டுகொண்டது. தன்னுள்ளத்திலுள்ள தற்காலிக நல்லுணர்ச்சி காலைப் பனித் துளிகளைப் போல விரைந்து மறைந்து விடாமல் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உவமை அழகில் புதைத்து அப்பாடல் தெரிவித்தது. பாடலை வாசித்துக் கொண்டே அவள் அவ் விசிறியால் தென்றலைத் தன் முகத்தில் அள்ளி வீசிக் கொண்டாள். ஒரு புன்முறுவலின் சாயல் அவள் முகம் முழுவதும் படர்ந்து ஒளி வீசிற்று.

"அன்பரே, தாங்கள், தங்கள் கவிதையாகிய இவ்வுயிரோ வியம், இவ்வளவுக்கும் ஏதுவாக அமைந்து நிற்கும் இவ்வினிய மனோகர மாலை நேரம் ஆகிய இவைகளின் நினைவாக, கவினும் கற்பனையும் கலந்த காலையழகுப் பாட்டைத் தாங்கிய இவ் விசிறி என் உயிருள்ளளவும் என்னிடம் இருக்கும். இது உறுதி' என்று கூறி, அக்காதற்பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக அவளும் ஒரு பாடல் இயற்றி அவனிடம் தந்தாள். அவனைப் போலவே அவளும் தன் உள்ளத்தில் ஊடாடிய காதலை மெல்ல நயம்பட வெளிப்படுத்தி யிருந்தாள்.

“உள்ளக் கதவம் திறந்து உட்புகுந்த என்

கள்ளன் என் கண்ணில் கரந்தான், இது என்கொலோ?

கள்ளன் தன் கண்ணில் பட மலராய், எனை

மெள்ளக் கொண்டேகி இடாயோ மென்தென்றலே!

அள்ளிக் கொண்டேகி இடாயோ இன்தென்றலே!”

அவன் முதற்பாட்டு நறுக்கைத் தென்றலே மியூகியிடம் கொண்டு வந்து, அவனையும் அவள் பக்கம் நாட வைத்திருந்தது. அத்தென்றலையே அவள் இப்போது தன் காதல் தூதுவனாக்