பிறமொழி இலக்கிய விருந்து -2
(243
நோக்கிக் கண்சிமிட்டினார். அஸோஜிரோவுக்குச் செய்தி ன்னதென்று தோன்றாவிட்டாலும் அவன் அரசியல் சூழ்ச்சி களிடையே அடிபட்டு, எப்போதும் முன்னெச்சரிக்கை உடையவனாதலால், சற்று விழிப்போடிருந்தான். பாலைப் பருகும்படி இவாசிரோ மீண்டும் தூண்டினான். அஸோஜிரோ அவ்வேளை வேறு ஏதோ ஒரு கருத்தை மனதிற்கொண்டு கவனிக்காதவன் போலிருந்தான். வஞ்சக நெஞ்சம் படைத்த இவாசிரோவின் உள்ளம் சஞ்சலத்தால் தடுமாறிற்று. இவ் வளவையும் விடுதிக்காரர் கவனித்துக் கொண்டிருந்தார்.
தன்மீது ஐயம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் இவாசிரோவைத் தாக்கியது. அஸோஜிரோவின் ஐயம் நீங்கி அவன் அடுத்த தாக்குதலில் விழிப்பிழந்து இருக்க வேண்டு மென்பதற்காக இவாசிரோ தானே அந்தப்பாலை எடுத்துப் பருகினான். முன்பே நஞ்சு முறிவு உட்கொண்டிருந்ததால் அவனுக்கு இத்துணிவு ஏற்பட்டிருந்தது. ஆயினும் இம்மாற்று நஞ்சுக்குச் சிரிப்பூட்டும் மருந்தின் மீது எப்படி ஆற்றல் இருக்க முடியும்? எனவே அது தன் விளைவுகளைப் படிப்படியாகக் காட்டத் தொடங்கிற்று.
இவாசிரோ பேச்சின் இடையே அடிக்கடி சிரித்தான். பேச்சுக் குறைந்தது. சிரிப்பு மிகுந்தது. அருகிலுள்ளோர் அவனை வியப்புடன் நோக்குவதை அவன் கவனித்தான். ஆனால் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துச் சிரித்து விலா நோவெடுத்தது.ஆனால் சிரிப்பு அடங்கவில்லை; இவாசிரோவால் அடக்கமுடியவில்லை. தன் கேலிக்குரிய நிலையை மறைக்க அவன் சிரித்துக்கொண்டே வெளியேறினான்.
நடந்தவை எல்லாவற்றையும் விடுதிக்காரர் இப்போது அஸோஜிரோவுக்கு விளக்கினார். நஞ்சு கலந்த பாலையும் அவர் எடுத்துக் காட்டி, இனி விழிப்புடன் இருக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொண்டு விடைபெற்றார். அஸோஜிரோவும் அவருக்கு மனமார்ந்த நன்றி கூறி, “உம்மை நான் என்றும் மறவேன். இன்று முதல் நீர் என் உயிர் நண்பர்" என்று கூறி அனுப்பினான்.
இயற்கையிலேயே துன்பந் தோய்ந்து, தொல்லை பல ஏந்தி நிற்கும் அஸோஜிரோவின் உள்ளம் முன்னிரவின் நிகழ்ச்சியால் பின்னும் கலவர மடைந்தது. அவனால் ஓரிடத்தில் நிலையாக