254) ||
அப்பாத்துரையம் - 24
வில்லை. தன் தோழியின் தந்தை குருதிக்காட்டில் கிடப்பது அவள் கண்பார்வைக்கு ஒரு தண்டனையாயிற்று.
க
மியூகியின் தந்தையிடமிருந்து முன்னால் வந்திருந்த ஸெகிசுகே என்ற தூதனிடம் சாமுரோபி, மியூகியை ஒப்படைத்து விட்டு உயிர் நீத்தார். இறக்கும்போது அவர் மியூகியிடம் “மகளே, உனக்கு வருத்தம் ஊட்டியதற்காக என்னை மன்னிக்கக் கோருகிறேன். மனைவியாகப் பெற வேண்டிய என் காதலியை இழந்தேன். மகளை என்றென்றைக்கும் இழந்தேன். ஆனாலும் நான் அவ்விருவர் சென்ற இடமே செல்கிறேன். அவர்களிரு வரையும் காத்து என் உயிரையும் தூக்குக்கயிற்றினின்றும் விடுவித்து உதவிய உத்தமனின்குடி என் குடிதான். தன் உயிரால் அஸாகே என் மரபின் கடமையில் பெரும்பகுதியை நிறைவேற்றினாள். என் உயிர்க் குருதியால் நான் அவள் கடனும் மீந்த உங்கள் கடனும் ஆற்றினேன். இதோ ஸெகிசுகேயிடம் உன்னை ஒப்படைத்துச் செல்கிறேன்.எங்கள் அனைவர் பெயரும் காத்து நீ நல்வாழ்வு வாழ்வாயாக" என்று கூறினார். அப்புறம் அவர் உதடுகள் அசையவில்லை; இதயம் துடிப்பதும் நின்றுவிட்டது.
ஸெகிசுகேயுடனிருந்து மியூகி சாமுரோபியின் இறுதிக் கடன்களை ஆற்றினாள். அதன்பின் ஸெகிசுகே அவளைப் பெற்றோரிடம் ட்டுச்சென்று நடந்தவை யாவும்
எடுத்துரைத்தான்.
இழந்த செல்வத்தைத் திரும்பவும் பெற்ற தாய் தந்தையர் இன்பத்துக்கு ஓர் எல்லை இல்லை. மகள் துயரங்களைக் கேட்டு அவர்கள் பாகாய் உருகினர். மகள் விருப்பத்தை அறியாமல் மணம் பேசிய தம் தவறுக்காக யூமினோசுகே பெரிதும் வருந்தினார். ஆனால் மியூகியின் தாய் மிசாவா “இனி சென்றதை எண்ணிப் பயனில்லை. இனிமேலாவது மகளைக் காதலனுடன் ணைத்து மகிழ்விக்க விரைவில் வழிகாணுங்கள்” என்றாள்.
முன்பு அஸோஜிரோவே கோமஸாவா என்பதைத் தாங்களும் அறியாமல், மியூகியும் அறியாமல் போனதால் நேர்ந்த இடையூற்றை விளக்கி யூமினோசுகே அஸோஜிரோவுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதன் இறுதியில் இப்போது மியூகி மீண்டும்