பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

271

நடிப்பையே உண்டுபண்ணும். அவை உண்மையில் மனிதனையும் இயக்காது; புறச்சூழல்களையும் மாற்றியமைக்காது.அக விருப்பம் ரண்டையும் செய்யும். அதைக் கண்டுணர்ந்து அகஅறிவு அல்லது உள்ளுணர்வுமூலம் அவற்றை மாற்றியமைப்பதனால், மனிதன் தன்னையும் மாற்றியமைத்து உலகையும் படிப்படியாக மாற்றியமைக்க உதவுகிறான்.

அக விருப்பங்கள் இரண்டு வகைப்படும். பிறப்பிலேயே அல்லது இளமைப் பயிற்சியிலேயே அமைபவை சில. இவை கிட்டத்தட்ட இயற்கையின் ஆற்றல் வாய்ந்தவை. இன்னொரு வகை மனிதன் செயலறிவு மூலம் மாற்றியமைத்து நீடித்துப் பயில்பவை.தன்னடக்கமுடையவன் உள்ளுணர்வின் ஆற்றலாலும் பயிற்சியாலும் இவையும் கிட்டத்தட்ட இயற்கை யாற்றலாகத் தக்கன. அத்துடன் இயற்கையாற்றலையும் இவை நாளடைவில் மாற்றியமைக்கத்தக்கவை. பழக்க வழக்கங்கள், தோழர் கூட்டுறவு கள் ஆகியவை மக்கள் பண்பை இவ்வாற்றலாலேயே மாற்றி யமைக்கின்றன. பழக்கம் இயற்கை யோடொத்த இரண்டாவது இயற்கை என்ற பழமொழி எழுந்தது இதனாலேயே.

நம்மை நாமே ஆக்கும் தெய்வீக ஆற்றல் நமக்குள்ளேயே இருக்கிறது. அதுவே நம் ஆன்மா. அது நம்மை விடுதலை நோக்கி இட்டுச் செல்கிறது. அதேசமயம் நம்மை அழிக்கும் அல்லது செயல் செய்யாமல் தடுக்கும் அடிமை ஆற்றலும் நமக்குள்ளேயே இருக்கிறது. அது நம் ஊழ்; நம் சிறைக்காவல். அது நம் எண்ணங்கள், செயல்கள் மூலம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது. எனவே மனிதன் செயல் வெற்றியடைய விரும்பினால் போதாது; தெய்வத்தை வணங்கினால் போதாது; வை இரண்டுடன் எண்ணங்களும் செயல்களும் ஒத்து ணைந்தாலல்லாமல் வெற்றி கிட்டமாட்டாது.

சூழ்நிலைகளை ஆக்கும் ஆற்றல் இங்ஙனம் மனிதனிட மிருக்கும்போது, சூழ்நிலைகளை எதிர்த்து ஒருவன் போராடுவ தாகக் கூறப்படுவதெங்ஙனம்? உண்மையில் சூழ்நிலைகளின் காரணத்தை அகத்தே வளர்த்துக் கொண்டு, அதன் புறத்தோற்ற மாகிய புறவிளைவை வெளியே எதிர்ப்பதாகத் தான் முடிகின்றது. இவ்விடங்களில் சூழ்நிலைகளின் அகக்காரணம் சிலசமயம் மனமாரத் தெரிந்த ஒரு குற்றங்குறை யாயிருக்கலாம்;

து