272 ||.
அப்பாத்துரையம் - 24
அல்லது வெளிப்படப் புலப்படாத, தன்னறிவற்ற குறைபாடா யிருக்கலாம். இக்காரணத்தை உள்ளூர வளர்த்துக் கொண்டு, புறவிளைவை எதிர்த்துத் தோல்வியடைந்து வருந்துபவன் முயற்சி, ஒரு கயிற்றை இரு கால்களால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, ஒரு கையால் இழுத்துவிடப் பார்க்கும் முயற்சி போன்றதாகும்.
சூழ்நிலைகளைத் திருத்தியமைக்க விரும்புபவர் பலர். ஆனால் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ள நாடுவதில்லை. அவர்கள் தன்னையும் அகலுவதில்லை. சூழ்நிலைகளைத் திருத்த, தன்னைத்திருத்த, தன்முனைப்புகளை ஒறுத்தடக்கத் தயங்காத வனுக்கு முடியாத செய்தி என்று எதுவுமிருக்க முடியாது. உலகியல் வாழ்வில் பெரும்பொருள் திரட்டவிரும்பும் ஒருவன்கூட அதைப் பெறுமுன் அதற்காகப் பெருந் தன்மறுப்பு செய்தாக வேண்டும். உலகியல் கடந்த உயர்வாழ்வில் தன் சரிசமநிலை பெற விரும்புபவன் இதனிலும் எத்தனையோ மடங்கு தன்மறுப்புச் செய்வது இன்றியமையாதது என்று கூறத் தேவையில்லை.
சூழ்நிலைகளை மாற்றியமைக்காமல் வாழ்வை மாற்றி யமைக்க விரும்புபவர்களுள் மிக இரங்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகின்றவன் செல்வனாக விரும்பும் ஏழையே. அவன் வறுமையின் சேற்றில் உழல்கிறான். தன் வறுமைச் சூழ்நிலைகள் மாறிக் கூடும் வாய்ப்புநலங்கள் திருந்த வேண்டுமென்பதில் அவன் எவ்வளவோ அக்கறையுடையவனாய்த்தான் இருக்கிறான். ஆனாலும் அவன் வேலையில் கருத்துச் செலுத்துவதில்லை. தன் ஊதியம் குறைவாயிருப்பது ஒன்றைமட்டும் காட்டி வேலை முதல்வரிடம் தன் குறைபாடுகளையெல்லாம் மறைக்கிறான். உண்மையான செல்வத்தின் தொடக்க மூலதத்துவங்களை அவன் உணர்வ தில்லை. வறுமைச் சேற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான தகுதி அவனுக்குச் சிறிதுங் கிடையாது. அதுமட்டுமன்று; ஆக்கத் தகுதிக்கு நேர்மாறான தன் ஏமாற்று, மடிமை, கோழைமை எண்ணங்கள் ஆகியவற்றில் உழன்று அவன் இன்னும் மிகுதியான வறுமையை வலிந்தழைத்துக் கொள்கிறான்.
மேற்கூறிய ஏழையுடன் சரிசமமாக எடுத்துக் காட்டக்கூடிய மற்றொரு பேர்வழி உண்டு. அவனே ஓயா நோய்க்காளான செல்வன். அவன் நோய்க்குக் காரணம் பேரூணேயாகும். தன்