பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

(273

நோயிலிருந்து விடுதலைபெற அவன் பெருந் தொகைகளை எவருக்கும் கொடுக்க அல்லது செலவழிக்க முன்வருவான். ஆனால் நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே ஒரு செயலை - தன் பேரூணை நிறுத்திக்கொள்வதை - அவன் செய்வதில்லை. இயற்கைக்கு மாறுபட்ட இன்பப் பொருள்களில் உள்ள தன் அவாவை வளர்த்துக்கொண்டே அவன் உடல் நலத்தையும் எதிர்பார்க்கிறான். உடல் நலத்தின் முழுமுதல் தத்துவத்தை அறியாததனால், அவன் உடல் நலம்பெறும் தகுதியை என்றும் அடைவதில்லை.

தொழிலாளரை உழைப்பில் ஊக்கவல்ல நல்லூதியம் தர விரும்பாமலே, ஆதாயத்தை மேன்மேலும் பெருக்க விரும்பும் செல்வனும் மேற்கூறிய இருவருடன் சேர்த்து எண்ணத்தக்கவனே யாவான். சம்பளத்தைக் குறைப்பதன்மூலம் மிகுதி ஆதாயம் பெறலாமென அவன் எண்ணுகிறான். இத்தகையவனும் ஆக்கத்தின் மூலதத்துவத்தை உணராதவன் ஆகிறான். அவன் பொருட்செல்வம் மட்டுமின்றிப் புகழ்ச்செல்வத்தையும் விரைவில் இழக்கிறான். இழந்த பின்னும் அவன் சூழ்நிலைகளைக் குறைகூறுகிறானேயன்றி, தன் நிலைக்குத் தானே மூலகாரணம் என்பதை அறிவதில்லை.

மனிதன் தன் சூழ்நிலைகளுக்குத் தானே காரணம் என்பதை அறியாமல், மரத்தின் கிளையிலிருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுபவன்போல, நன்னோக்கங்களைப் புற முயற்சியில் கொண்டு, தன் அகமுயற்சியால் தானே அப்புறமுயற்சியை அழிக்கிறான் என்பதற்கு மேற்கூறிய மூவரும் நல்ல சான்றுகள் ஆவர். ஒவ்வொரு துறையிலும் இவர்களைப் போலச் செயலாற்றுபவர்களைக் காண முடியும். ஆனால் எல்லாருடைய தவறும் ஒரு தன்மையனவே; காரணமாகிய கருத்தைத் திருத்துவதைவிட்டு, காரியமாகிய சூழல் மாறுபாட்டை மட்டும் திருத்தலாம் என்று அவர்கள் வீணே எதிர்பார்க்கிறார்கள்.

அகப்பண்புகளை அதாவது காரணமாகிய கருத்தை நற்பண்புகளாக்குபவர்கள் காரியமாகிய சூழல்களையும் மாற்றியமைத்து வெற்றிபெறுவார்கள்.புறப்பண்புகளை அதாவது சூழல்நிகழ்ச்சிகளைமட்டும் மாற்றியமைக்க எண்ணுபவர்கள் இரண்டிலும் தோல்வியே அடைவார்கள். இவ்விரண்டும்