(274
அப்பாத்துரையம் - 24
மெய்ம்மைகள் ஆகும். ஆனால் செயலுலகில் மாறா இம்மெய்ம்மைகளை எப்போதும் எளிதில் காணமுடியாது.
னனில் புறப்பண்புகள் மிகமிகப் பல. அவற்றைத் தனித்தனி பிரித்தறியக்கூட முடியாதபடி, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிச் சிக்கலாயிருக்கின்றன. அத்துடன் அகப்பண்புகளாகிய கருத்துக்களும் உள்ளத்தின் ஆழத்தில் வேரூன்றி நிற்கின்றன. நற்கருத்துக்களும் தீய கருத்துக்களும் அடிக்கடி ஒன்றிலொன்று மறைந்தும் உள்ளன. மக்கள் அகப்பண்பில் ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுகின்றனர். இக்காரணங்களால் அகப்பண்பு களுக்கு உரியவரைத் தவிர மற்றவர்கள் அப்பண்புகளைச் சரிவரக் காணமுடியாது. பண்புகளை உடையவனும் தன்னடக்கமுடைய வனாய் உள்முகமாகத் தன்னை ஆராய்ந்து பார்த்துத்தான் அவற்றை எளிதில் உணர்வான். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நல்ல அகப்பண்பின் பலனைப் புறப்பண்பிலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நல்ல புறப்பண்பின் காரணத்தை அகப்பண்பிலோ, தன்னாராய்வில்லாமல் தொடர்புபடுத்துவது அரிது. காரண காரியத்துடன் அகப் புறப் பண்புகளைத் தொடர்புபடுத்தியபின், அவற்றின் செயலை உடனின்று கெடுக்கிற பிற பண்புகளைப் படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வகை முறைகளாலேயே ஒருவன் தன் அகப்பண்பையும் புறச்சூழல்களையும் மாற்றி யமைக்க முடியும்.