பிறமொழி இலக்கிய விருந்து -2
279
வெளிஉலகில் இயற்கையின் யற்கையின் சட்டங்களை உணர்பவன் இயற்கையை அடக்கியாண்டு வானிற் பறக்கவும், கடலில் மூழ்கிச் செல்லவும், அணுவைப் பிளக்கவும், தொலைபேச்செழுப்பவும் தொலைக்காட்சி காணவும் ஆற்றல் பெறுவதுபோல, (அக இயற்கையின் சட்டங்களை உணர்பவனும் மக்களால் செயற்கரிய காரியங்களை எளிதில் செய்பவன் ஆகிறான்.)
இன்பதுன்பங்கள் யாவும் எய்துபவர் எண்ணிய வண்ண மேயன்றி வேறன்று. ஆனால் எண்ணுபவர் திண்ணிய எண்ணம் உடையவராயிருத்தல் வேண்டும். எல்லார் எண்ணங்களிலும் திண்ணிய கூறும் உண்டு. திட்பமற்ற கூறும் உண்டு. முந்திய கூறு இன்பத்தையும், பிந்திய கூறு துன்பத்தையும் தருகிறது. முன்னது நாடிய பயன் தருகிறது; பின்னது எச்சரிக்கை தருகிறது; ஆனால், சூழல்கள் பற்றியமட்டில், இரண்டு கூறுகளிலும் மிக முக்கியமானது பிந்தியதேயாகும். ஏனென்றால் அது புத்தறிவைத் தந்து இன்பநிறைவுக்கு வழி காட்டுகிறது. உள்ளத்தில் பண்புகளின் இணக்கமாகிய நல்லிசைக்கு அது வழிசெய்கிறது.
புறச்சூழல்களை ஒருவன் அகப்பண்புகளால் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறும்போதும், அகத்தைப் புறத்தின் உடைமை யாளாக்க வேண்டுமென்று கூறும் போதும், நாம் உலகியல் முறையில் செல்வஉடைமைகளைக் குறிக்கவில்லை. எவ்வளவு செல்வமுடையவனாயினும் ஒருவன் அகப்பண்பின் செல்வன் ஆகமாட்டான். அது ஒரு தனிச்செல்வம். புறச்செல்வத்தில் பற்றுடையவன் அதற்கு அடிமைப்பட்டவனே யன்றி, அதன் இறைவன் ஆகான். புறச்செல்வத்தை ஆள்பவன் என்பவன் அதனிடம் பற்றுக்கொள்வதையோ, அதை அடைவதையோ, பெருக்குவதையோ விட அதைப் பயன்படுத்தி இயக்குவதையே பெரிதாக எண்ணுவான். ஏனெனில் எவ்வளவு குறைந்த செல்வம் ஒருவனுக்கு இருந்தாலும் அதை நன்கு பயன்படுத்தி, அதன் பற்றற்று வாழ்ந்தால், அத்தகையவன் உள்ளத்தில் அகப்பண்பு களின் இசை நிலவும். செல்வப்பற்றுடையவனாய், அதனை ஈட்டுவதிலும் பெருக்குவதிலும் ஈடுபட்டவன் உள்ளத்தில் இவ் அகஇசைக்கு மாறாக அகமுரண்பாடே மிகுதியாயிருக்கும்.
செல்வத்தில் தற்பற்றற்று அதன் பயன்நோக்கி அதனை ஈட்டி இயக்குபவன் உலக நோக்கில் மட்டுமன்றி அகநோக்கிலும்