பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(290

அப்பாத்துரையம் - 24

ஒருமுகப்பட்ட இம்முயற்சிமூலம் அவனுக்குத் தன்னடக்கம், நினைவாற்றல் ஆகியவை வளர்கின்றன. அத்துடன் முயற்சியில் ஏற்படும் தோல்விகள் ஒவ்வொன்றும் அவன் உள்ளார்ந்த நலிவுகளைச் சுட்டிக்காட்டி, வருமுயற்சிகளிலே அவனுக்கு உள்ள உரத்தையும் அளிக்கும். தன்னடக்கம், நினைவாற்றல், உள்ள உரம் ஆகிய இந்த மூன்று திறங்களின் முழுக்கூட்டே தற்பண்பு எனப்படுகிறது. அதைப் பெற்றுவிட்டால் மனிதன் வெற்றியடைந் தவன் ஆகிறான். அவன் செயல் வெற்றிக்கு இவை உதவும்.

ஆயினும் செயல்வெற்றி முக்கியமானதன்று. செயல் வெற்றிக்கு மதிப்பும் விலையும் தருவது பண்பே.

மனிதன் புறப்பார்வையில் செயல் வெற்றி நோக்கமாகவும், பண்புவெற்றி கருவியாகவும்தான் தோற்றக் கூடும். ஆனால் அவற்றின் மெய்ப்பயன் உணர்ந்தோர் பார்வையில் செயல்வெற்றிதான் ஒரு கருவியாகிறது. பண்பு வெற்றியே வாழ்க்கைக்குரிய உண்மை வெற்றிக்கூறாய் அமைகிறது. ஏனென்றால் செயல்வெற்றி தற்காலிகமானது; செயல் முடிந்ததும் அதன் மதிப்புக்கு ஒரு முடிபு ஏற்பட்டுவிடுகிறது.

தமக்கெனத் தம் உரிமையுடன் ஒரு நோக்கத்தைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களே பெரியார்கள். அது முடியாதவர்கள் அல்லது முடியாதவிடத்தில், தத்தமக்கு ஏற்பட்டுள்ள அல்லது தரப்பட்டுள்ள கடமையையே நோக்கமாகக் கொள்ளுதல் பயனுடையது. கடமை எவ்வளவு சிறுதிறப்பட்டதாகக் காணப்பட்டாலும், அதனை வழுவின்றிப் பேணி உழைப்பதனால், நோக்கநாடி உழைப்பவன் அடையும் வெற்றியைக் கடமையாளனும் பெறுவது அரிதன்று. ஏனெனில் இங்கும் நோக்கத்தால் ஏற்படும் முயற்சியைப்போலவே, ஒருமுகப்பட்ட முயற்சி,தன்னடக்கம், உள்ளுறுதி ஆகியவை வளர இடமுண்டு.

வலிமையுடைய உள்ளங்களெல்லாம் மிகப் பெரும் பான்மையாக வலிமை பெற்ற உள்ளங்களாகவே இருக்கும். ஏனெனில் ஆற்றவும் வலிமை குறைந்த, நலிந்த உள்ளமுடையவர் உள்ளங்கூட வலிமைத் தத்துவத்தை உணர்ந்தால் வலிமை பெறலாகும். அத்தத்துவமாவது: முயற்சியினாலும் நீடித்த டைவிடாப் பயிற்சியினாலும் வலிமை பெறத்தக்கது என்பதே.