84
||– –
அப்பாத்துரையம் - 25
முன் பெற்றவள் என்ற கதை பொய்யா யிருக்கவேண்டும் என்று அவள் அறிந்தாள். அவள் கங்குவை நோக்கி 'அம்மா, என்னிடம் உண்மையைக் கூறிவிடு. பாலகிருஷ்ணன் நீ பெற்ற குழந்தை யல்ல என்று நான் அறிவேன். அதுயார் குழந்தை?' என்று கேட்டாள்.
இனி உண்மையை மறைக்க முடியாது என்று கங்கு உணர்ந்து கொண்டாள். இன்னொருத்தியாயிருந்தால் தன கென ஒரு குழந்தை பிறந்துவிட்டதே இனி எடுப்புப் பிள்ளை யேன் என்று நினைத்திருப்பாள். ஆனால் பாலகிருஷ்ணன் அவள் தசையில் பிறவாவிடினும் இப்போது அதனுடன் அன்பில் கலந்துவிட்டான். எங்கே உண்மையை வெளியிட்டால் அவனை இழந்துவிட வேண்டிவருமோ என்று அவள் தயக்கமடைந்தாள். ஆனால் மருத்துவ நிபுணர் சற்று நயங்காட்டித் தானொன்றும் தீங்கு செய்வதில்லை என்று கூறியபின் அவள் மெல்ல யாவும் ஒத்துக்கொண்டாள்.
மருத்துவமாது உண்மையிலேயே மிகவும் கனிந்த உள்ள முடையவள். பிள்ளைப்பாசமன்றிக் கங்குவின் செயலில் தீய எண்ணம் எதுவுமில்லை என்பது அவளுக்கு வெள்ளிடை மலையாக விளங்கியது. அதேசமயம் பிள்ளையை உரியவரிடம் சேர்க்கவேண்டும் என்றும் அவள் நேர்மையுள்ளம் விரும்பிற்று. கங்குவின் நல்ல பெயருக்கு ஊறு ஏற்படாமலே இரண்டு காரியத்தையும் செய்ய அவள் மூளை திட்டமிட்டது. அதன்படி ஒரு சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு பொய் நாடகம் நடிக்கப் பட்டது. பாலகிருஷ்ணனுக்கு நோய் என்று அவள் அடிக்கடி பொய் மருந்து கொடுத்துவந்தாள். ஒருநாள் திடீரென்று அவன் இறந்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. பிள்ளை என நம்பும்படி தலையணை ஒன்று கட்டி இடுகாட்டிற் அனுப்பப் பட்டது. ஆனால் உண்மையான பாலகிருஷ்ணன் மறைவாக மருத்துவமாதின் ஆள் ஒருவர் மூலம் தொலைவிடத்துக்கு அனுப்பப்பட்டான்.
ராமுவும் கங்குவும் மிகுந்த மனவருத்தத்துடனேயே இவ் ஏற்பாட்டுக்கு இணங்கினர். பின்னர் மூன்றாண்டுகள் பிள்ளை தொலைவிடத்தில் இராமுவின் செலவில் வளர்ந்து வந்தது. அதன்பின் மருத்துவ மாது தற்செயலாகப் போவதுபோல்