பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

89

தற்காலப் புது நாகரிகப் போக்குகள் அவனுக்குப் பிடிப்பதில்லை. அவற்றால் இறுதியில் அழிவு நேரிடும் என்பதே அவன் நம்பிக்கை.

இக்கோட்பாட்டின் பயனாகக் கோமான் காப்பி, தேயிலை, பலகாரங்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில்லை. பழையது, கஞ்சி முதலியவையே காலை உணவாக்கப்பட்டன. துணிகளிலும் கையால் நூற்கப்பட்டுக் கைத்தறியால் நெய்யப்பட்ட 'கதிர்' ஆடையையும் தானும் உடுத்து வீட்டுப் பெண்களும் உடுக்கச் செய்வான்.

(எ

இக்கட்டுப்பாடுகள் கைம்பெண்ணான நீலாவுக்கே கடுமையாயிருந்தன. இள மங்கையாகிய கோகிலாவுக்குக் கேட்க வேண்டியதில்லை. அவள் மெல்லிய தாவணிகளையும் பளபளப் பான துணிமணிகளையும் விரும்பினாள்; எழுச்சி தரும் காப்பியிலும் சிற்றுண்டி வகையிலும் இரவு பகலாக அவ ளுக்குத் தேட்டமாயிருந்தது. அவள் இயற்கையில் நல்ல வனப்பு உடையவள். ஆனால் கோமானின் போக்குக் காரணமாக, அவளைவிட எவ்வளவோ குறைந்த அழகுடைய பெண்கள் பகட்ட ான உடையுடுத்து அவளை வெட்கப்படும்படி செய்தும், அவமதித்தும் வந்தனர். இளைஞர்களுக்கும் உடைவழி, அழகுணர்ச்சி சென்று, பகட்டான தோற்றத்திற்கு முதல் மதிப்புக் கொடுப்பது கண்டு கோகிலா மனம் புழுங்கினாள்.

நீலா, கோகிலா ஆகியவர்களின், நிறைவேற்றப்படா ஆவல்கள் அவர்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்து ஏமாற்ற மாகவும், ஏமாற்றம் வெறுப்பாகவும், வெறுப்புப் பகையாகவும் மாறின. வறுமையில் கிடந்த தங்களை அவன் வலிய அழைத்து ஆதரவு தந்தான் என்பதை அவர்கள் மறந்தனர். அவன் தம்மிடம் பற்றுடையவன் போல் நடந்து கொண்டாலும், தம் நல்வாழ்க்கை யில் பொறாமை கொண்டு அதை அழிக்கவே அவன் சூழ்ச்சி செய்கிறான் என்றும், தான் வாழாததால் பிறரும் வாழப் படாதென்று அழி நினைவுடையவன் என்றும் அவர்கள் எண்ணினர்.

“இந்தப் பண ஆசை பிடித்த பேய் தன் வாழ்நாள் உள்ள மட்டும் நமக்கு உண்மையில் செல்லாக் காசும் தரப்போவதில்லை. நம்மைவைத்து ஆதரிப்பதாகக் கூறுவதெல்லாம், பணங்காசு செலவில்லாமல் நம்மிடம் புழுக்கை வேலை வாங்கிக் கொள்வ