பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம் - 25

“பயிற்சிக்கு இரண்டாண்டு அனுபவம் வேண்டும் என் கிறார்களே. அப்படியிருக்கப் பயிற்சி யில்லாமல் எடுக்க மாட்டேன் என்று கூறலாமா?

“அதற்கு நாங்கள் என்ன செய்வது. பயிற்சியுள்ளவர்கள் நிறைய இருக்கும் பள்ளிகளைப் பார்த்துச் செல்லுங்கள்"

பயிற்சியில்லாதவர்களை மிகுதியாக அம்முதல்வர் வேலைக்கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து ஹரிஹரன் தன் விதியை நொந்தான்.

அவன் இதன்பின் மிகப்பணிவோடு பலர் பள்ளிகளில் மன்றாடினான். அப்பணிவு கண்டு ஒரு முதல்வர் அவனிடம் இரக்கம் காட்டினார். "எங்கள் பள்ளியில் பயிற்சியில்லாத ஆசிரியர் இடம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்குச் சரியான வாக்குறுதி தரும் ஆட்கள் கிடைக்கவில்லை. நீங்கள் பாவம் நல்ல ஆளாகத்தோன்றுகிறது; இந்த வாக்குறுதியை நீங்கள் அளிப்பதாயிருந்தால், உங்களுக்குப் பதவி தருகிறேன்” என்றார். அவர் 'முதல் முதலாக வெற்றியஞ் செல்வி கடைக் கணித்தாள் என்ற மகிழ்ச்சியுடன் ஹரிஹரன் “என்ன வாக்குறுதி வேண்டுமானாலும் தருகிறேன். அருள் கூறுங்கள்” என்றான்.

முதல்வர்: எங்கள் பள்ளிக்கு உரிய ஊதியம் 40 ரூபாய்; ஆனால் நாங்கள் 25 ரூபாய்தான் கொடுக்கமுடியும், அதைப் பெற்று 40 ரூபாய் பெற்றதாகக் கையெழுத்திட முடியுமானால், வேலைபார்க்கலாம்.

வேறுவழியின்றி ஹரிஹரன் இதனை ஏற்றான்.

ஆனால் மறுமாதமே 20 ரூபாய் வாங்கிக்கொண்டு 40 ரூபாய்க்குக் கையெழுத்திட ஒரு ஆள் முன்வந்தான். இதுபற்றி அவன் முனங்கியபோது முதல்வர் 30 ரூபாய் பெற்றுக் கைழுத் திட்டவனை அனுப்பிவிட்டுதான் உன்னைப்போட்டோம்' என்றார்.

அவர்முன் தன்பணிவு கண்டு இரங்கியதாகத் தான் எண்ணியது தவறு என்று அவனுக்கு இப்போது தெரியவந்தது.

தோல்வி வெற்றிக்கு ஒருபடி; முயற்சி திருவினைஆக்கும் ; ஆறுதடவை தோற்றும் ஏழாம் தடவை ராபர்ட் புரூஸ்போல