138
அப்பாத்துரையம் - 25
மாலை இதன்பின் தொலைதூரத்தில் சென்று ஒரு வைர வியாபாரியை யடுத்து அவனுக்கு இச்சகமாய் நடந்து அவனது நம்பிக்கைக்குரிய பணியாளாய் நாளடைவில் அவன் கணக்கா ளானான். ஒருநாள் நிரம்பப் பணத்துடனும் இரத்தினமணி களுடனும் பயணம் செய்கையில் ஓர் ஆற்றைக் கடக்கவேண்டி வந்தது. ஆற்றின் பக்கமாகப் படகுகிடந்தும் ஓட்ட ஆளில்லை. தங்க இடமில்லாததால் ஆறுகடந்தும் தீரவேண்டும். வியா பாரிக்கோ நீந்தவும் தெரியாது. படகோட்டவும் தெரியாது. மாலை தானே ஓட்டுவதாகக்கூறி வியாபாரியுடன் படகிலேறி நட்டாற்றில் தற்செயலாகக் கவிழ்ந்தமாதிரி காட்டிப் படகைக் கவிழ்த்துவிட்டுப் பணப்பைகளுடன் கரைக்கு நீந்திவந்தான்.
பல திருட்டுக்களில் ஏமாற்றமடைந்த மாலை இத்துடன் விட்டு விடாமல் வியாபாரியிடம் காட்டிய நடிப்பைத் தொடர்ந்து நடித்தான். கரையில் நின்று பதறிப்பதறி ‘எசமானே, இதோ இருக்கிறேன். இப்பக்கமாக வாருங்கள், இதோ வாருங்கள்' என்று கத்தினான்.
அப்படியும் அவர் வராததனால் எசமானிறந்ததற்குத் துடிப்பவன் போல் மணலில் புரண்டு அழுதான். அண்டையில் கூடியவர்களிடம் ‘என் எசமான் இறந்தார். அவர் பொருள்களை என்சின்ன எசமானிடம் ஒப்படைக்க வேண்டும், யாராவது ஆளனுப்புவீர்களா?' என்றான்.
ஆயிரத்துக்கொருவன் இவன், மிக நம்பிக்கை நாணய முள்ளவன் என்று எண்ணிய மக்கள் அப்படியே அனுப்பி வியாபாரி மகனை வருவித்தனர். அதன்பின் வியாபாரி உடல் கண்டெடுத்து அடக்கம் செய்யப்பட்டது. எசமானபக்தி, நாணயம் ஆகிய நல்லபெயர்களைச் சம்பாதித்த மாலைக்குப் புதிய எசமான் பங்கும் பரிசும் வேறு கொடுத்தான். அதோடு, நீந்துவதை யாவரும் அறிந்திருக்க வேண்டும் என்றும், ஆற் றோரப் படகுகளில் படகோட்டி கட்டாயம் இருக்கச் செய்யவேண்டுமென்றும் எடுத்துரைத்துப் பெரிய அறிவாளி, சமூகசேவகன், மகாத்மா என்ற புகழ் உரைகளும் சம்பாதித்தான். இப்புகழுடன், அவன் சீரும் செல்வமும் வளர்ந்தன.
ஆனால் இவ்வளவுக்கிடையில் வியாபாரியின் பையை மாலை ஓரிடம் புதைத்து வைத்திருந்தான். அவன் புதிய புகழ்