பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. இன்பவாழ்க்கையின் உரிமை

அடகடவுளே, நம் அம்முவின் கணவனல்லவா இறந்து விட்டான்' என்ற கூறித் தான் படித்துக்கொண்டிருந்த தந்தித் தாளைக் கீழே வீசினார் சம்பு. அதைக்கேட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி சாலு 'என்ன, என்ன அம்முவின் கணவனா இறந்துவிட்டான். ஐயையோ, இனி என்ன செய்வோம். அவள் மணவினைக்குப்பின் மன்றல் நிறைவு விழாக்கூட நடை பெறவில்லையே. என்ன கொடுமை!' என்ற அழுது அங்கலாய்க்க லானாள்.

என்ன அரவம் என்று பார்க்கவந்த அம்முவிடம் சாலு ஒன்றும் சொல்லமாட்டாமல் 'கண்ணே உன்விதி இப்படியா அமையவேண்டும். என் பாவம் உன் வாழ்வையும் கெடுக்க வேண்டுமா?' என்று அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

சம்புலிங்க ஐயரும் விசாலட்சியம்மையும் (சாலு) தம் மட்டான வரும்படியில் காலந்தள்ளி வந்தனர். மகள் நல்வாழ்வை எண்ணி உள்ள பொருளை எல்லாம் திரட்டி, உயர் கல்விக்காகப் பயின்றுவந்த சீனுவுக்கு அவளை மணமுடித்து வைத்தனர். அவள் பருவமடைந்த பின்னும் சீனுவின் தாயான தைலம் பெருந்தொகை தந்தாலல்லாமல் மன்றல் நிறைவு விழா நடத்த முடியாது என்று சொன்னதனால் அவள் அதை எதிர்பார்த்துத் தாய் வீட்டிலிருந்தாள். இந்நிலையில் தாய்தந்தையரும் அதனை விட அம்முவும் அடைந்த மனத்துயரை வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

மணவிழாவின் போது பொம்மை வைத்து விளையாடும் சிறுமியாயிருந்தவள் அம்மு. மணவினை என்றால் என்ன என்பதை அவள் இப்போதுதான் அறியத் தொடங்கிய பருவம். அதற்குள் பேரிடிபோன்ற இச்செய்திகேட்டு அவள் எண்சாணும்