பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

153

மதுரம்: ஏதோ விதவையானாலும் பெண் அழகுதான். ஆனால் ஊரார் வசவு செய்வார்களே. ஏன் இந்தத் தொல்லை யில் மாட்டிக்கொள்கிறாய்? முன்பின் ஆலோசித்தப்பார்.

எக்ஞன்: அம்மா நான் ஊராருக்காக வாழவில்லை! மேலும் ஊரில் தடங்கல் செய்தால் காசி சென்று மணப்பதாக உறுதி செய்துவிட்டேன்.

தந்தை: அவ்வளவு எதற்கு எக்ஞா! இந்த அவசர புத்தியைவிட்டு விட்டு வேறு இடமாகப் பார்த்துச் செய். எனக்கு இது பிடித்தமில்லை.

எக்ஞன்: அப்பா, தங்களுக்குப்பிடித்தமில்லை யானால் கூட வேறு வழியில்லை. நான் எங்கே சென்றாவது அவளை மணக்க உறுதி கொண்டுவிட்டேன்.

மகன் நன்மையில் நாட்டமடைய அத்தாய்தந்தையர்அவன் விருப்பத்திற்கு இணங்குவது வழக்கமாய்ப் போய்விட்டது. தம்மால் தீர்க்க முடியாத கடன் சிக்கல்களை அவன் வளர்ந்து குடும்பத் தொழிலை மேற்கொண்டபின் தீர்த்து வைத்தது அவர்கட்குத் தெரியும். ஊரே எதிர்த்தாலும் அவன் வெற்றி பெறும் ஆற்றலுடையவன் என்றறிந்த அவர்கள் அவனுக்கு வாழ்த்துக் கூறினர்.

இருபுறமும் தாய் தந்தையர் இணக்கம் பெற்றபின் அம்முவை எக்ஞன் தன் தாய் தந்தையரிடம் இட்டுச் சென்றான். இதுவரை அவளைப்பற்றிக் கேள்விமூலம் அறிந்த அவர்கள் அவள் அழகு, குணம் ஆகியவற்றை அறிந்து பழகப்பழக மகன் வற்புறுத்தலுக்கிணங்கிய இணக்கம் மனமார்ந்த இணக்க மாயிற்று. அவர்கள் அம்முவை மன மகிழ்வுடன் வாழ்த்தினர்.

கன்னி நறுமணம் போலவே, பூவுடனும் பொலிவுடனும் இன்னிசை யரங்குகளுடனும் அம்முவும் எக்ஞனும் மண முடித்துக்கொண்டனர். மணத்துக்கு ஆதரவாக ஒரு கட்சியும் எதிர்ப்பாக ஒரு கட்சியும் ஊரிலிருந்ததாயினும் ஒவ்வொருவராக எக்ஞனின் அன்பிலீடுபட்டு எதிர் கட்சியினரும் வந்து விட்டனர்.

அம்முவை வாழ்த்தும் முதியவர்களுள் தைலமே முன் னிலையில் நின்றாள். இதுகண்ட ஊரார் ஒவ்வொருவரும் வியப்பால் மூக்கில் கைவைத்தனர்.