பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(156) ||__

அப்பாத்துரையம் - 25

உண்மையில் விசுவநாதன் வழக்கு மன்றதைப்பற்றி அறிந்த தெல்லாம் வழக்கில் பணத்தை இறைப்பதெப்படி, செல்வத்தைச் சீரழித்து வழக்கிலும்தோற்பதெப்படி, ஒரு வழக்கை ஒன்பது வழக்காய்ப் பெருக்கி மன்றாடி வக்கீல்களைக் கொழுக்கவைப்ப தெப்படி என்பதுதான். துரைசாமி இறக்குமுன் தனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தால் அதை அவர் பிள்ளைகூட்டிக் கொள்ளும்படி செய்து அவர் செல்வமுழுவதையும் நேரடியாகக் கைக்கொள்ள எண்ணியிருந்தான். ஆனால் அவனுடைய இவ் விருப்பம் கைகூடவில்லை. அவர் இருக்கும் காலத்திலெல்லாம் பிறக்காமல், இறந்தபின்னரே அவனுக்குப் புதல்வன் பிறந்தான். இக்காரணத்தால் அவன் தன் மாமனார் செல்வத்தில் தன் மனைவியின் செல்வத்தைமட்டுமே தனதெனக் கூறிக்கொள்ள முடிந்தது. அதுவும் மனைவி கையெழுத்திட்டால்தான். தன் கொழுந்தியாகிய இலட்சுமி சிறுமி யாதலால் அவள் பங்கை அவன் பயன் படுத்தமுடியாமல் அதன் வருவாயை மட்டுமே கள்ளக் கணக்கு மூலம் வீணாக்க முடிந்தது.

விசுவநாதனுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது ‘பிச்சைக் காரப்பயல்- சற்று முந்திப் பிறந்திருக்கக் கூடாதா? இப்பஞ்சை பிறக்கும் நேரம் தெரியாமல் பிறந்து தன்னையும் பஞ்சையாக்கி என்னையும் பஞ்சையாக்கிவிட்டான்' என்றான். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவனுக்கு இன்னும் மூன்று பெண்கள் பிறந்தன. 'முதலில் பஞ்சத்தால் வாடினேன். இப்போது பெரு வெள்ளங்களால் இன்னலுறுகிறேன். இரண்டுவகையிலும் எனக்குக் கேடுதான்' என்பான் அவன். உருக்குவும் இலட்சுமியும் குழந்தைகளிடம் உயிராயிருந்தனர். தானாடாவிடினும் தசை யாடும் என்ற முறையில் அவனும் அவ்வப்போது குழந்தைக என்பில் ஈடுபடுவான்.

ஆண்டுகள் செல்லச் செல்ல இலட்சுமி வளர்ந்து மணப் பருவத்தை அணுகிவந்தாள். அவள் மணமானதும் அவள் பங்குச் செல்வம் விசுவநாதனை விட்டு விலகிவிடும் என்பதை அறிந்த அவன் கடன்காரர்கள் அவனைக் கடனுக்காக நெருங்கி முற்றுகையிட விரைந்தனர். பலர் வழக்கு மன்றில் அவனு க் கெதிராகத் தீர்ப்பு வாங்கினர். அவனுக்குத் தன் பெயரில் செல்வம் கிடையாது.மனைவிகொழுந்தி பேரில் மட்டுமே எதுவும் உண்டு.