பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(164) || -

கட்

அப்பாத்துரையம் - 25

டினாலும் அது கட்ட ஒட்டும். மணமில்லா திருக்க வாட்டாது. அதுமட்டுமா? இதோ பார்! உலக ஆசாரத்தின் கூத்தை! மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உணவு உடைதர ஒரு கணவன் தான் சம்பாதிக்காததுடன் நிற்காமல் மனைவி, கொழுந்தி ஆகியவர்கள் செல்வத்தையும் பாழாக்கி, அவர்கள் உழைப்பையும் பாழாக்கும் எமனாயிருக்கிறானே. அத்தகைய எமனைக் கட்டினாலும் கட்டித்தான் ஆகவேண்டும். பழிதீர்ந்து விடும். நாமாக உழைத்துச் சாப்பிட்டால் சாதி சமூகம் பழிக்குமே. ஆண்கள் எவ்வளவு மூடமாய்ப் பிறந்தாலும் அவர்களுக்கு இருக்கும் உரிமை, எவ்வளவு அறிவுடையவர்களாயிருந்தாலும் பெண்களுக்குக் கிடையாது.

இச்சமயம் விசுவநாதன் வந்தான். உருக்கு அவனை நோக்கி "திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள். இலட்சுமிக்கு மனதில்லை. அவள் எண்ணுவது சரி என்றே தோன்றுகிறது" என்று துணிந்து கூறினாள்.

விசு: 'சீ, சுத்தப் பைத்தியமே. இனி எதுவும் நிறுத்த முடியாது. அந்த எமகிங்கரக் குருக்களுக்கு ரூபாய் 25 ம் அழுது தொலைத்தாய்விட்டது. மண ஏற்பாடுகளுக்குகாக இன்னும் ரூபாய் 25 செலவாக்கியாய்விட்டது. இவ்வளவும் கைப்பண மல்ல; கடன் வாங்கிய பணம். இந்த மணம் முடியாவிட்டால் அவள் செல்வமட்டுமல்ல, நம் மானமும் போய்விடும்.

உருக்குவுக்கு ஒரே மனக்குழப்பமாயிற்று. "இவ்வளவும் என் பிழையால் வந்தது. உங்கள் பைத்தியக்காரத் திட்டத்தை அன்றே நான் எதிர்க்காது விட்டது தவறு” என்றாள் அவள்.

'செய்வது செய்வோம், பொறுப்பு யார் தலையிலாவது விழட்டும்' என்ற நினைத்த அந்தக் கோழை ‘ஆம். அவ்வளவும் உன்னால் வந்த தவறுதான்' என்று கூறி உடலை நெட்டிவிட்டுக் கொண்டான்.

உருக்குவின் தலை சுழன்றது. உள்ளமும் உடலும் அலுத்து அவள் படுக்கையில் சோர்ந்து கிடந்தாள்.

ஆக்கவேலை எதிலும் உணர்ச்சியும் ஊக்கமுமற்ற விசுவநாதன் இவ்வழிவு வேலையில் வழக்கத்துக்கு மாறான ஊக்கமும், சுறுசுறுப்பும் காட்டினான். அவன் உருக்குவைத்