பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

165

தனியே தன்னறைக்கு இட்டுச்சென்று மேலும் தன் சூழ்ச்சிப் பயிருக்கு நீர் விட்டான். “நீ நான் சொன்னதைவிட்டு எதை எதையோ பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டாய். ஆனால் போனது போகட்டும். குருக்களை ஏமாற்றினால் அவன் தண்டோரா அடிப்பான். ஆகவே அவன் வாயை மூடவாவது வேடிக்கை மணம் செய்துவிட வேண்டும். ஆகவே உன் தங்கையைக் கூப்பிடு.

உருக்கு: "அது முற்றிலும் வேடிக்கை மணம்தானா?”

விசு: “ஆம், வேறென்ன மனைவியும் மக்களும் உடைய இக் கிழவனுக்கு உண்மையில் மணம் எதற்கு? குருக்களுக்காக இ நாடகத்தை முடித்து விட்டுப் போவோம்.

உருக்கு: அப்படியானால் அவள் மறுபடியும் உண்மையில் மணம் செய்து கொள்ளக் கூடுமா?

விசு: ஓகோ நன்றாகச் செய்யலாம்.

அறிவுடைய உருக்குவே சிறுபிள்ளைகள்போல் இதனை நம்பி ஏற்றுக்கொண்டாள். இலட்சுமி அவள் உறுதியான நம்பிக்கைகண்டு தானும் இந்நாடகத்துக்கு உடன்பட்டாள். அவ்விருவரும் கூறியபடி குருக்களிடம் அது வேடிக்கை மணம் என்பதை வெளியிடாதிருக்கவும் இணங்கினாள்.

ஆனால் மணமுடிந்து இலட்சுமியைப் படுக்க அனுப்பிய பின் விசுவநாதன் பெருமூச்சு விட்டு ‘அப்பாடா, ஒருவகையில் காரியத்தை முடித்துவிட்டேன். இனி இலட்சுமியின் செல்வம் நமக்குத்தான்' என்றான்.

உருக்கு: அட சண்டாளா! வேடிக்கை மணம் என்றுதானே சொன்னாய். இத்தனை வஞ்சகமா?

விசுவநாதன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

இலட்சுமி அவளைக் கண்டதும் ‘என்ன அக்கா, அது வேடிக்கை மணம் என்று முதலிலேயே சொல்லியிருக்கப் படாதா? நான் உன்னை இவ்வளவு மனம் புண்படுத்தி யிருக்க மாட்டேனே' என்றாள்.