காதல் மயக்கம்
று
175 வானேன். மாதச் சம்பளக்காரர் என்று பலர் பெண் கொடுக்கக் காத்திருக்கக் கூடும். யாராவது தட்டிக்கொண்டு போனால் என்ன செய்கிறது?
காமா: அதுசரி. நான் ஒன்றும் கண்டிப்பாகக் கேட்கச் சொல்லவில்லை. ஏதோ வாழ்க்கைக் காப்புச் செய்திருப்ப துண்டா என அறிவதுதானே?
இ.சு.: நான் அறிந்தவரை செய்திருக்க முடியாது. இது வரை செய்யாதிருந்தால் இனிச் செய்வதும் முடியாது. 54 வயதில் எந்தக் காப்புக் கழகம் வாழ்க்கைக் காப்பளிக்க முன் வரும்?
எந்தக் கழகமும் நம்பிப் பணமுடக்காத இடத்தில் தன் கண்மணியைத் தான் கொண்டு தள்ள நேருகிறதே என்று அவள் மனம் நொந்தாள். 'சரி, இனிப் பேசிப் பயனில்லை. தருமாம்பாள் தலையெழுத்து அவ்வளவுதான். வேறு வழியில்லாவிட்டால் அதையே செய்யுங்கள்'என்று அவள் கூறிவிட்டுக் கடவுளை நொந்து கொண்டு 'தர்மம்! உன்னை இப்படிக் கொண்டுதள்ள வேண்டியிருக்கிறதே' என்றழுதாள்.
இ.சு: நீ அழுவதைப் பார்த்தால் செல்வமுள்ள கிழவனை விட ஆண்டியான இளைஞனை நீ விரும்புவாய் போலிருக்கிறது. உன் விருப்பம் அதுவானால் ஏதாவது நம்மினும் ஏழையைப் பார்த்துக் கொடுத்து விடலாம். என்னைப் பற்றியவரையில் அதுவே மேன்மையானது என்று எண்ணுகிவேன்.
காமா: வேண்டாம். அதைச் சமூகம் ஒப்பாது. நம் பழக்க வழக்கங்களைத் துணிந்து எப்படி விடமுடியும்?
கிழவனை மணப்பதில் எவ்வகை நன்மையுமில்லா விட்டாலும் உலகம் அதை ஒரு பொருட்டாக எண்ணாது. ஏழ்மையை அது ஒருபோதும் மன்னிக்காது' என்றாள்.
இ.சு: சரி, அப்படியானால் உன் முடிவுப்படியே செய் கிறேன். அதை நேரடியாகச் சொல்லி விடுவது தானே!
காமா: ஏதோ பெற்ற மனமும் இயற்கை உணர்ச்சியும் கேட்கவில்லை. ஆனால் அதற்காகப் பழக்கத்தை மீறத் துணிவும் வரவில்லை. பழக்கம் மதயானையைவிட வலிமையுடையது.