பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. தெய்வச் செயல்

பார்வதி ஒரு நல்ல குடும்பப்பெண் அவள் சிறு பிள்ளையா யிருக்கும்போதே வறுமையின் அனற்காற்று அவள் குடும் பத்தின்மீது வீசலாயிற்று. ஆயினும் அவள் தாய்தந்தையர் தம் ஒரே மகளான அவளைக் கூடியமட்டும் செல்லமாக வளர்த்து வந்தார்கள். அவள் நல்ல அறிவும் அறிவுக்கேற்ற அழகும் உடையவள். குடும்பம் வறுமைப்பட்ட போதும் துன்பம் எப்படி யிருக்கும், நோய் எப்படியிருக்கும் என்பவற்றை அறியாவண்ணம் பெற்றோர் ஆதரவில் அவள் வளர்ந்து வந்தாள்.

பார்வதியின் பெற்றோர் அவளை அம்பி என்ற இளைஞ னுக்கு மணமுடித்து வைத்தனர். அம்பி தாய்தந்தையரை இழந்தவனானாலும் சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவன்.எளிய முயற்சியுடன் பொருள் தேடத்தக்க பல சிறு தொழில் களில் அவன் பூசை செய்து காணிக்கைகள் பெறுவான். மண விழா, இழவுவினை ஆகியவை நடைபெறுமிடங்களில் குருக்களாயிருந்து ஊதியம் பெறுவான். அவன் வகுப்பினர் ஈடுபடாத இத்தொழில்களில் அவன் முதன்முதலாக ஈடு பட்டதனால் அருமையும் நல்லூதியமும் கிடைத்தன. இவை தவிர விறகுக் குத்தகை எடுத்து சில்லறைக் கடைக்காரர்களுக்கு அனுப்பி வைத்துத் தரகு பெறுவான். ஊர் வழக்குகளில் நடுவரா யிருந்து தீர்ப்பளித்து இருபுறத்தவர் நன்கொடைகளும் உரிமை யாகக் கொள்வான்.

மணவாழ்க்கையின் தொடக்கத்தில் பார்வதி முன்போல் குறைவற்ற நிலையிலேயே வாழ்ந்தாள். அவள் அழகும் சிக்கன வாழ்வும் அவளை வீட்டுக்கு நல்லரசியாக்கிற்று. கணவனும்