காதல் மயக்கம்
187
அம்பி: அந்த ஆறு பிள்ளைகளும் வறுமையினால் தானே இறந்தன. அவ்வறுமையைப் போக்கவேண்டுவது அவசியந் தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். பிள்ளைப் பேற்றைக் குறை கூறுவதைவிட வறுமையைக் குறைகூறு. நம் அரசியல் தலைவர்கள் வறுமையைக் குறைக்க வழிசெய்து கொண்டுதா னிருக்கிறார்கள். ஏழைப் பிள்ளைகளின் தாய்மார்களுக்கு வேண்டும் உதவி செய்வதாகத் திருமதி சர்வோபகாரி யம்மையார் விளம்பரங்கூடச் செய்திருக்கிறாள்.
பார்வதி: மெய்யாகவா? இவ்வளவு தெய்வச் செயலைப் பற்றிக் கூறியவர்கள் இதைச் சொல்லப்படாதா? ஏதோ 'இரத்தல் இழிவானாலும்' பிள்ளைகளைப் பட்டினி போடு வதைவிட இரந்தாவது பார்க்கிறேனே.
அம்பி அதற்கு ஒத்துக்கொண்டான்.
பார்வதி திருமதி சர்வோபகாரியைப் பார்க்கச் சென்ற நேரம் நல்ல நேரமாகத்தான் இருக்கவேண்டும். அவள் பல செல்வ அன்பர்களுடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தாள். எல்லாரையும் போல் அவளும் பட்டும் ஜரிகையும் பகட்டான நகைநட்டுமாயிருந்தாள். ஆனால் பார்வதியைக் கண்ட து மே அவள் பாகாயுருகித் தேனாய்ப் பேசினாள். 'ஏனம்மா, நீ ஏழைத் தாயா? எட்டுக் குழந்தையா? நல்லது, இதோ நாற்காலியில் உட்கார்.பட்டினியும் பசியுமா? அம்மாடி, பாவம். எல்லாம் இனிச் சரியாகக் கவனிக்கிறேன். இதோ, இந்தச் சிற்றுண்டியும் தேயிலை யும் அருந்தி இளைப்பாற்றிக் கொள்' என்றாள்.
கணவன் வேதாந்தத்தைக்கூட நம்பத் தொடங்கினாள் பாரு. உண்மையிலேயே பசியோடிருந்த அவள் மணமானபின் என்றுமறியாச் சிற்றுண்டியை அன்று உட்கொண்டாள். அதன் பின் திருமதி சர்வோபகாரி யம்மையார் அவளை அன்பாக அழைத்து “அம்மா, உன் தங்கமணிகளை அழைத்துக்கொண்டு என் வீட்டில் வந்து என்னைப் பார். இப்போது வேலையிருக் கிறது.போய்வருகிறேன்' என்றாள்.