பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

அப்பாத்துரையம் - 25

'பாவிக்காகவே நான் பிறந்தேன்' என்ற ஏசுபிரான் வாக்கு அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் மறுகணமே அப்பெரியார் பெயர் கூறும் சமயமும் தன்னைப்புறக்கணித்துவிட்டதை உணர்ந்து அவள் மனம் நைந்தாள்.

'தாசிக்கு இடம் கொடுக்கிறதே நம் சமயம். எனக்கு மட்டும் டம் கிடையாதா' என்று அவள் வாதாடினாள்.

'உலகறியக் கெடுபவள் தாசி. நீ ஏமாற்றிக்கேடு சூழ்ந்தாய். நீ இறந்தொழிதலே நலம், போ' என்றாள் கல்யாணி.

அரசி கூறிய இறுதி விடுதலைக்குத் தமக்கையே வழி காட்டினாள். அவள் கங்கையின் ஆழ்ந்த இதயத்துள் அமைதி நாடினாள்.,

அவள் உடல் நீங்கியபின்னும் உயிர் உலவியிருக்கக் கூடு மாயின் அவளைக் கொல்ல உதவிய, தூண்டிய, வற்புறுத்திய அதே சமயமே அவள் செத்ததற்காகவும் அவள்மீது பழி கூறுவதை அவள் கேட்டிருப்பாள். 'பழிகாரி! செய்த பழிகள் அத்தனையும் போதாதென்று இறுதியில் மாபாதகமாகிய தற்கொலையிலும் இறங்கினாள்' என்று மக்கள் அவளைத் தூற்றினர்.

இறக்கமுனையும் தறுவாயில் உமா வாய்விட்டுக் கூறிய மொழிகள் இவை: 'இறைவனே, நீ கொடுத்த அறிவைக் கொண்டு நீ உண்டா, இல்லையா என்றுகூட அறியும் ஆற்றல் எனக்கில்லை. உன்னை அறிய முதலில் உதவிய ஒரு சமயம் என்னை நல்வழியில் போகவிடாமல் தீயவழியில் தள்ளிப் பின் தூற்றி வெளியேற்றியது. உன்னை அறிவிக்க முனைந்த இன் னொரு போட்டிச் சமயமோ, என் பழைய சமயத்தை எதிர்ப் பதிலும் ஒழிப்பதிலும் காட்டிய ஆர்வத்தில் எட்டிலொரு பங்கு என் நலத்தில் காட்டவில்லை. அதுவும் என்னை அகதியாக விட்டுவிட்டது. அகதிக்கு நீயே துணை என்று சமய நூலோர் கூறுவார்கள். உன் பெயரால் நடைபெறும் சமயங்களாலும் காக்கமுடியாத அகதியை நீ காப்பாற்றுவாயா? காப்பாற்றினும்