பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 25

கதவும் திறந்தது. நொந்தழுத பிள்ளையை அணைக்கும் தாயின் நெஞ்சு போல வண்டி அவளை ஏற்றது. பிள்ளை அழுவதுபோல அவள் அழுதாள். பிள்ளை அழுதோய்ந்து தாய் மடியில் உறங்குவதுபோல அவளும் உள்ளே உறங்கினாள். அது கண்டு அவன் ஆறுதலுற்றான்.

'பேசாமடந்தை விடுதி!' ஆம், அங்கேதான் தன்னை இறக்கி விடும்படி அவள் கோரியிருந்தாள். அது எங்கேயிருக்கிறது? அவன் புதர்க்காட்டிற் பிறந்தவன்தான், அதன் வழிகளை நன்கு அறிந்தவன்தான், ஆனாலும் இப்பெயரை அவன் இதற்குமுன் கேட்டதில்லை. யாரிடம் வினவுவது? கிழவனிடம் கேட்டிருக் கலாம். அவன் வேண்டாத வகையில் துன்பத்தில் துவளும் இம்மெல்லியலாள் பற்றித் துளைத்தறிய விரும்பினான். ஆகவே வேறு யாரையாவது கண்டு வினவவேண்டும் என்று காவிக்காரன் சிந்தித்தான்.

அவன் கண்கள் நாற்புறமும் தேடின. யாரையும் காண்பதா யில்லை. ஆயினும் என்ன? அன்று நவம்பர் ஐந்தாம் நாள் என்பது அவனுக்குத் தெரியும். புதர்க்காடெங்கும் அது சொக்கப்பனை விழா நாள். பிரிட்டானியர் கிறிஸ்தவராவதற்கு முன்னிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கிறிஸ்தவ நாகரிகம் கடந்து வெஸ்ஸெக்ஸ் புதர் நில மக்களிடையே அது வழங்கிவந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாற்புறமும் பலப்பல அழற்பிழம்புகள் தெரியும். அதுவரை எவரும் வராவிட்டால், அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஒளி விளக்கத்தினருகில் சென்று வழி வினவலாம் என்று காவிக்காரன் காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக மூலைதோறும் வெள்ளொளிகள், செவ்வொளிகள், மின்னொளிகள், கரும் புகைச் சுருள்கள் தெரிந்தன. புதர்க்காட்டின் மையத்தில் அதன் பிடரிபோலிருந்த நடுமேட்டின் மீது பண்டைக் கல்லறைமாடம் ஒன்று இருந்தது. காவிக்காரன் கண்கள் அதன்மீது சென்றன. அதில் இன்னும் ஒளியில்லை. ஆனால் வானத்தின் பின்னணியில் அதன் புறவடிவம் நன்கு தெரிந்தது. மேட்டின் தலைபோல ஒரு குவடும் அதன் மிது தலையணைபோலக் கல்லறை மாடமும் தோன்றின. கல்லறை மாடத்தின்மீது தலையணிச் சூட்டுப்போல ஒரு நிமிர்கோடு தெரிந்தது. முதலில் அது உயிரற்ற ஏதோ