12
அப்பாத்துரையம் - 25
“அவளுக்கு உன் முழுப்பெயர் எப்படித் தெரியும்?”
66
என் தங்கை அவள் தோழி"
க்கரிவென் மீதிக்காட்சியை வருணிக்குமுன், தன் மருமகள் திருமணத்துக்கு முன்பே ஏதோ இடர் நேர்ந்திருக்க வேண்டுமென்று திருமதி யோப்ரைட் ஊகித்தாள். அவள் தசைகள் அவளை மீறித் துடித்தன. 'எங்கே அவளை நான் பார்க்கிறேன்' என்று விரைந்து சென்று வண்டியின் உள் நோக்கினாள். என்றும் படுத்தறியாத படுக்கையில் வைக்கோல் செத்தைகள் மீது தாம்சின், காற்றெடுக்கப்பட்டு விட்ட ரப்பர் பொம்மைபோல் கிடந்தாள். அவள் கண்களில் உலர்ந்த கண்ணீர் தடங்கள் தெரிந்தன. ஆனால் உறக்கத்தை விடச் சோர்வுதான் கண்களை மூடவைத்திருந்தது.நாடி நரம்புகள்கூட உறங்கிற்றோ என்றபடி அவள் கிடந்தாள். பொன் முகில் வண்ணம் போலத் தலைமுடி சிதறிக் கிடந்தது. அதனருகே முழுநிறைகலையுடைய பிள்ளை இளமதியின் நிழலாக அவள் வட்டமுகம் சோர்ந்திருந்தது. முகத்தோற்றத்தின் பின்னணியில் அவளுக்கு இயல்பான களங்க மற்ற நம்பிக்கை, சூதுவாதற்ற களியார்வம், பாசம் யாவும் இன்னும் டங்கொண்டன. ஆனால் அதன் அமைதியை முற்றிலும் குலைக்கத்தக்க குமுறல், அவநம்பிக்கை, மனக்கசப்பு ஆகியவற்றின் சீர்குலைவுகள் முன்னணியில் முனைப்பாகத் தெரிந்தன. அவள் கொவ்வைக்கனியிதழின் செந்நிறம் சிறிது மங்கிவிட்டது. ஆனால் அதனுடன் தொடர்புகொண்ட கன்னங்கள் முழுதும் வெளிறி விட்டபடியால் இதழின் நிறமாற்றம் தனிப்படத் தெரியவில்லை. இதழ்கள் இன்னும் துடித்தன. உள்ளம் சோர்ந்தும் துன்பத் துடிப்பை அவளால் மறைக்க முடியவில்லை.
தான் ஒருகால் காதலித்த பெண் ஆயினும் குடும்பப் பெண் - அவள் அழகை அந்நேரம் பார்த்தால் தகாதெனக் கருதி டிக்கரி அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அதற்குள் அவள் எழுந்தாள்; கண்ணைவிழித்து ஒன்றும் தோன்றாமல் சுற்றிப் பார்த்தாள். அத்தை முகங்கண்டு திகைத்து, “நீங்கள்... இங்கே... நான் இப்போது எங்கிருக்கிறேன்?” என்றாள்.
வில்டீவ் அன்று அவளை மணந்து கொள்ளவில்லை. இருவரும் மணம் செய்யப்போகும்போது, சமயத்தலைவர் மண உரிமைச்சீட்டுச் சரியில்லை என்றார். சீட்டு 'பட்மத்'திற்குரியது,