14
1-
அப்பாத்துரையம் - 25
இயல்பான ஒரு தவறு மட்டுமே என்றும், மீண்டும் மணச்சீட்டுப் பெறும் தாமதம் தவிர வேறு கவலைப்படுவதற்கொன்றுமில்லை என்றும் அவன் விளக்கம் கூறினான். பெண்டிரும் வேறு செய்வகை எதுவும் காணாமல், கூறியபடி விரைவில் செய்யும்படி மட்டும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டு சென்றனர். ஆனால் வில்டீவ் அவர்களை இடையே தன்னுடன் தங்கியிருக்கும்படி கூறியதற்கு, அவர்கள் அறவே இடந்தராது மறுத்துவிட்டனர்.
மணமுறிவுச்செய்தி மறுநாளே ஊரெங்கும் பரவி விட்டது. மணமுடிந்தபின் மணத்துணைவரைப் பாராட்டி விட்டு வந்ததாகக் கருதிய நண்பர்களும் இவ் எதிர்பாராச் செய்திகேட்டு வருந்தினர். தாம்ஸின் அறையுட்கிடந்து அழுந்தினாள், வெளியே தலைகாட்டவில்லை. திருமதி யோப்ரைட்கூட நடமாட்டத்தை வெறுத்தாள்.
வெளி
தாம்ஸினின் துயரோ அவள் அத்தையின் சீற்றமோ வில்டீவின் மனத்தை அசைக்காததற்குக் காரணங்கள் இல்லாம லில்லை. திருமதி யோப்ரைட் தொடக்கத்திலிருந்தே தாம்ஸின் வில்டீவைக் காதலிப்பதை வெறுத்தவள். அதற்காகத் தாம் சினைக் கடிந்த வெறுத்தவள்.. அவள் அத்துடன் அமையவில்லை. குடும்பத்தினர் எவரும் வெறுப்பைக் கொண்டுபோகாத அளவுக்கு அவள் கொண்டு சென்றாள். மணமாகுமுன் கோவிலில் மண முன்னறிவிப்புச் செய்யப்படுவது ஆங்கில நாட்டுமுறை.அதுமுதல் வாரந்தோறும் பிறர் இணக்க எதிர்ப்புக்களை அறிய அது மேடையில் எடுத்துரைக்கப்படும். அத்தகைய தறுவாயில் திருமதி யோப்ரைட் எதிர்பாரா வகையில் எழுந்து நின்று
மணவினையைத் தான் எதிர்ப்பதாகக் கூறினாள். இதற்குப் பின் தாம்சினின் வற்புறுத்தலாலும் செங்சலாலும் திருமதி யோப்ரைட் மணவினைக்கு வேண்டா வெறுப்பாக இணங்கினாலும் அவள் செயலை வில்டீவ் தனக்குச் செய்த அவமதிப்பாக எண்ண இடமிருந்தது. இப்போது அவள் செல்லாச் சீற்றத்தால் அவளுக்கு ஏற்பட்ட புதிய அனுபவம் அவள் மனத்துக்கு நிறைவளிக்கக் கூடியதாயிருந்தது என்பதில் ஐயமில்லை.
ஒரு அத்தை மீதுள்ள சீற்றத்தால் எந்த உண்மையான காதலனும் தன் காதலியைத் தாம்சின் துடித்தது போலத் துடிக்க விடமாட்டான்.ஆனால் காதலை ஒரு வேட்டையாகக் கருதுபவன்