தாயகத்தின் அழைப்பு
15
வில்டீவ். அதில் அன்பு இல்லை; தற்பெருமை இருந்தது; போட்டி உணர்ச்சி இருந்தது. தாம்சின் துயர் அவன் தற்பெருமைக்கு விறகாயிற்று திருமதி யோப்ரைட்டின் சீற்றம் அவன் போட்டி உணர்ச்சியை வளர்த்தது.
அவன் மணமுறிவின் பின்னணியில் வேறுபல செய்திகளும் இருந்தன.
காவிக்காரன் டிக்கரிவென், மாடத்தில் இருளில் பார்த்த பெண்ணுருவம் வேறு யாருமல்ல, மீகாமன் வை மகள் பிள்ளையாகிய யூஸ்டேஷியாதான். கிழவன் காண்டிலும் பிறரும் கடைசிவரை விடாது எரிந்துகொண்டே இருந்ததாகப் பார்த்த தீயும் அவள் வளர்த்ததேயாகும்.
கிழவன் காண்டிலும் பிறரும் வருவது கண்டே அவள் மாடத்திலிருந்தும் இறங்கி அப்பால் நின்றிருந்தாள். அவர்கள் போனபின் அவள் மீண்டும் அங்கே வந்து நின்றாள். மாடத்தில் தீயவிந்து ஒன்றிரண்டு சுவடுகளே மீந்திருந்தன. அவள் நெடுநேரம் அங்கே நின்றிருந்தாள். இரவின் தனிமையில் அவள் உள்ளம் எங்கெங்கோ திரிந்தது. அவள் நெடுமூச்சு வானத்தின் மூச்சுடன் கலந்தது. அதன் வெப்பு அப்புதர்க்காட்டின் வெப்புடன் ஒன்று பட்டது. அவள் கண்கள் நாற்புறமும் துழாவின. தொலைவில் ஒரு சிறு ஒளிவட்டம் தெரிந்தது. அதைக் கண்டதும் அவள் தன் இடுப்பிலிருந்து ஒரு தொலைநோக்குக் கண்ணாடியை எடுத்து அதன் மூலம் அவ்வொளிவட்டத்தில் கருத்துச் செலுத்தினாள். சிறிது நேரம் பார்த்தபின் மீண்டும் வெய்துயிர்த்தாள்.
அவள் பார்த்த ஒளிவட்டம் வில்டீவின் அறையில் பலகணியில் தெரிந்த ஒளியேயாகும். தொலைநோக்குக் கண்ணாடியில் பார்த்தபோது அவள் பெருமூச்சுவிடக் காரணம், அதன் மூலம் அவள் பலகணிக்கெதிராக வில்டீவ் இருப்பதையே கூர்ந்து கண்டுகொண்டது ஆகும்.
யூஷ்டேஷியா இம்முன்னிரவில் உண்மையில் வில்டீவுக் காகவே காத்திருந்தாள். அவன் அவளுடைய நீண்ட நாள் காதலன். தே நாள் இதே நேரம் அவன் வாரந்தவறாமல்