18
66
அப்பாத்துரையம் - 25
உனக்கான அடையாளம் என்று இப்போது நீ கொள்ள வேண்டியதேவை, என்ன வந்துவிட்டது? நீ அவளை நாடினாய். நீயாக உன் வரவை நிறுத்திக்கொண்டாய். அதன் பின் நான் உன்னிடம் பேசமுடியாது. என் அடையாளத்தை அதன்பின் மதிப்பானேன்?” அவன் தலை கவிழ்ந்து சில கணம் நின்றான்.
"அப்போது இந்த அடையாளம் எனக்காக அல்ல என்றுதான் கொள்ளவேண்டுமா?" என்றான் கம்மிய குரலில்.
அவள் மனம் இளகிற்று. "ஆம்; வில்டீவ், உனக்கான அடையாளம்தான். நான் கேள்விப்பட்டேன், கோவிலில் நடந்ததை. உன் உள்ளம் ஊசலாடியிருக்கிறது, என்னை விட்டுப் போகவில்லை என்று உணர்ந்தேன். ஆகவே அழைப்பு விடுத்தேன்” என்றாள் அவள்.
பெண்மான்களை வேட்டையாட விரும்பிய பெண் வேடன் தான் அவன்.ஆனால் வேடரை வலைவீசிப்பிடிக்கும் மான் அவள். பெண்களைக் கவர்ந்து ஆட்கொள்ள நினைத்தவன் அவன். அவள் அத்தகைய ஆடவனையே தேடி ஆட்கொள்ளத்தக்கவள். அவள் அவனை மீட்டும் ஈடுபட வைத்தாள். அத்துடன் பணிய வைக்க நாடினாள். “நான் உறுதிபடைத்தவள். நீ உறுதியில்லாமல் போனாலும் உன்னை மீட்டும் இழுக்கும் ஆற்றல் எனக்கு உண்டு." என்று தொடங்கினாள்.
66
அவன் திமிறினான். இது தற்பெருமை. இது நான் கூறவேண்டியது. நீயாகக் கூறிக்கொள்கிறாய்?” என்றான்.
“நீயே என் முக அழகை இன்னொரு தடவை கேட்டுப் பார்” என்று கூறி அவள் சட்டெனத் தன் முகத்தைச் சுற்றிப் போர்த்திருந்த போர்வையை அகற்றினாள். முகில் திரை நீங்கிய முழுநிலாவைப் பழித்த அவள் முகத்தை அவன் முன் பலதடவை பார்த்தவன்தான். ஆனால் அவன் திகைப்புடன் அவன் கவர்ச்சியில் மெய்மறந்து நின்றான். “நீ நாடிய வேட்டையில் இதுபோன்ற மானைப் பார்த்ததில்லையல்லவா?” என்று கூறி அவன் முகத்தைத் தன் முகத்துடன் இணைத்துக்கொண்டாள். "உனக்குத் தீங்கு செய்துவிட்டேன்” என்றான் அவன்.
"இல்லை. நீ எனக்கு உன் அருமையைக் காட்டியிருக்கிறாய்.”