பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

66

"உன் தோள் இனிது.

""

19

"தாம்ஸின் தோள் இனிமை அறிந்தபிறகு கூடவா?"

யூஸ்டேஷியாவின் தந்தை படைத்துறை இசைமேளக்கார ராயிருந்தார்.ஃபிரெஞ்சுக்காரர். பட்மத்தில் அவர் தங்கியிருக்கும் போது யூஷ்டேஷியாவின் தாய் எப்படியோ அவரிடம் ஈடுபட்டுத் தந்தையைப் பகைத்துக்கொண்டு அவரை மணந்தாள். அவள் தாய் அருமை தெரிந்த அவள் தந்தை தாயின் பெயரை ஏற்று இங்கிலாந்திலேயே தங்கிவிட்டதுடன், மாமனார் பணத்துடன் மகளை நன்கு படிக்க வைத்து அவரிடமே அனுப்பி அவர் மன்னிப்பைப் பெற்றார். இம்மாமனே மீகாமன் வை. அவர் போரில் காலெலும்புகள் உள்ளுற நொறுங்கப்பெற்றதால் ஓய்வு பெற்றவர். புதர்க்காட்டில் இடம் மலிவானதால் அங்கு தங்கினார். அவரிடம் இருந்த தொலைநோக்குக் கண்ணாடியில் தொலைவில் தெரிந்த கடற்பகுதியை அவர் பார்ப்பது வழக்கம். அவர் புதுக்கட்டிடம் கட்ட அறுத்த பலகைகளின் மீந்த துண்டுகளையே யூஷ்டேஷியா காதலனுக்காகத் தீப்பந்தத்திற்கு எரித்தாள்.

யூஸ்டேஷியா பட்மத் வாழ்வை விரும்பினாள். புதர்க் காட்டை வெறுத்தாள். புதர்க்காட்டு மக்களையும் அவள் புறக்கணித்தாள். யாருடனும் பழகுவதில்லை. ஆனால் அவள் பெண் உள்ளம் ஆண் மகன் ஒருவனைத் தேடியபோது, வில்டீவ் பிறரைவிட நாகரிகமாகத் தோன்றினான். அவனிடம் தன் ஆற்றலைக் கையாடிப் பயின்றாள். எப்படியாவது மணம் செய்துகொண்டு பட்மத் அல்லது இன்னும் நாகரிகமான இடம் செல்லவேண்டுமென்பதே அவள் இடையறா ஆர்வமாயிருந்தது.

யூஸ்டேஷியாவுக்காகத் தீப்பந்தம் எரித்துக்கொண்டிருந்த பையன் உண்மையில் சூசன்நன்சச்சின் மகனே. செல்வி வை பந்தம் எரித்த அன்றெல்லாம் அவன் இரவில் வானவெளியிலிருந்ததால் தான் நோய்வாய்ப்பட்டான் என்றதாலேயே அவன் அன்னை யூஷ்டேஷியாவைச் சூனியக்காரி என்று கருதி வெறுத்தான்.

பையன் காசை வாங்கிக்கொண்டு ஓடும் வழியில் டிக்கரிவென்னின் வண்டியருகில் புதர் தடுக்கி விழுந்தான். டிக்கரி அவனுக்கு உதவிசெய்து, பேச்சுக் கொடுத்து யூஸ்டேஷியா