20
அப்பாத்துரையம் - 25
வில்டீவ் காதற் சந்திப்புகள் பற்றி அறிந்து கொண்டான். அவன் பழைய காதல் பரிவாலும் நட்புக் கனிவாலும் மாறியதனால், அவன் அவள் மனைவியின் தடங்கலகற்றி அவள் குடும்பத் துயரொழிக்கத் திட்டமிட்டான். யூஷ்டேஷியா வில்டீவுடன் சந்தித்துப் பேசியதும் அவன் கேட்டுவிட்டான். அவன் நல்ல காலத்தில் அவசரம் காட்டி யூஸ்டேஷியாவிடம் நேரில் சென்று பேசினான்.முதலில் தாம்ஸின் திருமணம் நிறை வேற வில்டீவிடம் பேசி உதவவே கோரினான்.
'வில்டீவிடம் கூற நான் யார்?" என்றாள் அவள்.
66
டிக்கரி துணிந்து 'நீதான் அவள் திருமணத்தைத் தடுக்கிறாய். வில்டீவுடன் நீ காதல்புரிவதை நான் அறிவேன். உன்னைவிட அவன் வாழ்வுக்கு அவள் இன்றியமையாதவள்” என்றான்.
யூஸ்டேஷியா புதர்க்காட்சிகளை வெறுத்தாள் என்பதறிந்து அ ளைப் பட்மத்தில் ஒரு வீட்டுக்கு உயர்பணியாளாய் அனுப்புவதாகவும் ஆவலூட்டினான். ஆனால் யூஸ்டேஷியா மனம் முற்றிலும் அவன் மொழியில் அமையவில்லை. டிக்கரி யூஸ்டேஷியாவிடம் பேசியது கடமைக்காக. ஆனால் காதல் அவனுக்கு மற்றொரு திட்டத்தையும் துணிச்சலுடன் கூறியது 'வில்டீவ் முற்றிலும் மறுத்தால், தன் காதலியின் முறிந்த வாழ்வைத் தானே ஏற்று ஏன் செப்பம் செய்யக்கூடாது?” என்று அவன் எண்ணமிட்டான். இதில் ஆர்வம் அவனை உந்த அவன் திருமதி யோபிரைட்டிடம் இதை நயமாகக் கூறினான். அவள்
துவே நல்ல திட்டம் என்று கருத முடியாவிட்டாலும் வில்டீவை நெருக்க இது நல்ல பின்னணிக் கையிருப்பு என்று கொண்டாள். தவிரத் தான் வெறுத்தலில் ஃவிரடை விட இவன் கேடில்லை என்று அமைந்தாள்.
வில்டீவிடம் அவள் பேச்சின் முறுக்கு இதனால் மாறிற்று. இதுவரை வில்டீவ் மணஞ்செய்து கொள்வதாகக் கூறினானே யன்றி அதில் உள்ள குடும்ப அவமதிப்பை எண்ணி விரைவும் அக்கரையும் காட்டவில்லை. ஆயினும் அவன் தற்பெருமையை விட்டுக் கெஞ்சவேண்டியதிருந்தது. ஆனால் இப்போது அவள் 'தாம்சினை மணம் செய்துகொள்க' என்று வேண்டவில்லை.