பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. தாயகத்தின் மைந்தன்

ஹெக்டன் புதர்க்காட்டுப் பகுதிகளில் தற்கால நாகரிகமும் நிலப் பண்பாடும் மிகுதியாகப் பரவாததுபோல தற்காலக் கல்விமுறையும் பரவவில்லை. ஆயினும் திருமதி யோப்ரைட் தன்புதல்வன் கிளிம்முக்குச் சிறு பருவத்திலேயே தாயகத்தின் முழுக் கல்வியும் கடந்து தொலைநகரங்களின் பண்பையும் வளர்த்தாள். இளமையிலேயே இக்கல்வி அவன் வெளித் தோற்றத்தையும் அவன் கருத்துக்களின் புறவடிவையும் மாற்றி யிருந்தன. ஆயினும் அகத்தே புதர்க்காட்டின் ஒப்பனையற்ற இயல்பான கவர்ச்சி அவன்மீது தன் சுவட்டைப் பதிப்பித் திருந்தது. ஆனால் விசித்திரம் என்னவென்றால் இது அவனைப் புதர்க்காட்டுக்கு இழுத்ததே தவிரப் புதர்க்காட்டு மக்களை அவன்பால் இழுக்க உதவவில்லை. அவன் புதர்க்காட்டு மக்களை மதித்தான். அவர்கள் பண்புகளைப் போற்றினான். போற்றி வளர்க்கவும் எண்ணினான். இது அவன் கலைப்பண்பு. தோற்றத்துக்காக அல்ல; அகப் பண்புக்காக. அவர்களும் அவனை மதித்தனர். ஆனால் இம்மதிப்பு அவன் அகப்பண்புக்காக அன்று, அவன் தாயகப்பற்றுக்காக அன்று, அவன் புறப்பண்புக்காக, அவன் வெளியிடப் பயிற்சித் திறத்திற்காக, நாட்டுப்புறம், நாட்டுப்புறத்தை இயல்பாகக் கருதிற்று. ஆனால் நகர்த்திறத்தை உயர்வுடையதாகக் கருதி அவாவிற்று. ஆனால் நகரத்தின் கல்வி, நாகரிகம், பண்பு, செல்வம் யாவும் கைவந்த இவ்விளைஞன் புதர்க்காட்டை முன்னேற்றும் உயர்கலையார்வத்திற்காக எல்லாவற்றையும் துறக்க ஒருங்கியிருந்தான்.

சிறு பருவத்திலேயே, புத்தகங்களில் காட்டும் ஆர்வத்தை விட இயற்கையின்-புதர்ப்பரப்பின் அழகில் அவன் மிகுதி ஆர்வம்காட்டி ஈடுபட்டிருந்தான். அவன் தாயகத்துத் தோழர், புதர்க்காட்டில் அவன் காண அப்படி என்ன இருக்க முடியும்