24
||--
அப்பாத்துரையம் - 25
என்று விழித்தனர். பணமும் பகட்டும் கலைநயமும் உடைய அவனைக் கண்டு அவர்கள் அன்பும் புத்தார்வமும் கொண்ட போது, அவன் அவற்றில் பெருமைகொள்ளாமல் அவர்களிடம் கருத்துச் செலுத்தினான். இதையும் அவர்கள் உணரக்கூட
வில்லை.
அவன் கிறிஸ்துமசுக்கு வர இருப்பது கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது அவன் பாரிஸ் வாழ்விடையே ஒருவார இடைக்கால அவசர ஓய்வைமட்டுமே. அது கண்ணுக்கும் வெளியுலக வாழ்வைச் சிறிது உற்றுப்பார்க்க உதவும் மாயப் பலகணியாக அமையலாமென்று எண்ணினர். ஆனால் அவன் வந்தது உண்மையில் ஓய்வுக்கல்ல, நிலையான வாழ்வுக்கு. பாரிஸில் அவன் ஒரு பெரிய வைரக் கழக வாணிபத்தில் பணிசெய்தான். அதை விட்டுவிட்டுத் தாயக மக்களிடையே கல்வியைப் பரப்பும் உயர்நோக்கத்துடன் அவன் வந்தான்.
கிளிம் வரவின் முழுநோக்கமும் புதர்நில மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவன் விசித்திரக் கருத்துக்களும் விசித்திரப் பண்புகளும் உடையவன் என்பது எல்லாருக்கும் தெரியும். இது வெளியூர் கல்வியால் வந்த கேடு என்று சிலர் கருதாமலுமில்லை. ஆனால் நாகரிக மொழியாகிய பிரஞ்சு மொழியை அவன் பேசுபவன். உலக நாரிகத்தின் நடுவிடமாகிய பாரிஸில் உயர்குடி மக்களிடையே பழகியவன், உயர்ந்த நாகரிகப் பழக்க வழக்க முடையவன், பெரும் பணம் புரளும் நிலையங்களைச் சார்ந்தவன் என்ற புகழ் எல்லோரையும் அவனை அண்ணாந்து பார்க்க வைத்தது. அவன் வரவைப்பற்றியே சந்து பொந்துகள்தோறும் பேச்சாயிருந்தது.
ப்பேச்சுப் பல வகையிலும் யூஸ்டேஷியாவுக்கும் எட்டிற்று. அவளைச் சூழக் காற்றில் பறந்து அப்பேச்சின் அலைகள் மோதின. கீழே புல்லறுவடைக்களத்தில் தொழி லாளரும் ஊர் மக்களும் இது பற்றியே பேசுவதும் அவர் களிடையே அவள் பாட்டன் வை கலந்துகொள்வதையும் கவனித்து அவள் உற்றுக் கேட்டாள்.
மீகாமன் வை புதுமையும் புதுக்கல்வியும் வெறுத்தவர். அவர் கிளிம்மின் புதுக்கல்வி, புதுமைக்கருத்துக்களை வெறுத்தே