28
அப்பாத்துரையம் - 25
முடியும். மற்றவர்கள் பார்த்தார்களோ, அடையாளம் கண்டார்களோ என்னவோ ஆடவன் அவளைக் கண்டதுமட்டும் உறுதியாயிற்று. ஏனெனில் அவன் ‘நல்லிரவு' என்ற சொற்களைத் தெளிவாகக் கூறி அவளுக்கு வணக்கம் தெரிவித்தான். அவளும் ‘நல்லிரவு' என்று முணுமுணுத்துக்கொள்ளமட்டுமே முடிந்தது. அவள் நடந்தது இன்னது என்று தெளியுமுன் அவ்வடிவங்கள் சென்றுவிட்டன.
தற்செயல் நிகழ்ச்சிகள் சிலசமயம் நனவார்வங்களைத் தாண்டிக் கனவார்வங்களை எதிர்கொண்டழைப்பதுண்டு. யூஸ்டேஷியாவகையில் இது உண்மையாயிற்று. எந்த உருவத்தைக் கனவிலன்றி நனவில் எளிதில் காணும் நம்பிக்கை அற்றிருந் தாளோ, அதை வரும் பொழுதே காணும் பேறும், கண்ட முதற்பொழுதிலேயே எதிர்பாராத வகையில் அதன் அறிமுகம் பெறும்பேறும் அவளுக்குக் கிடைத்தன.
-
இந்நிகழ்ச்சி, அதன் காட்சிகள், அதில் அவள் தொடக்கத் திலிருந்து கடைசிவரை கேட்ட பலர் வாயுரைச் சொற்கள் எல்லாம் கேட்டபொழுதைவிட பின்னிட்டு அவள் உள்ளத்தில் பதிந்து, நினைவாகிய தூண்டுதல் ஏற்பட்டபோதெல்லாம் மணி ஒலி செய்து ஒலித்தன. அவற்றிடையே ஒருமுகம் கண்காணாப் பாரிஸின் கண்காண கற்பனைச் சின்னமாயிருந்து இப்போது அதன் கண்கண்ட சின்னமாய்விட்ட கிளிம்மின் முகம் - அவன் சொற்கள் வீறுடன் அவள் கட்புலன் மீது மிதந்தும் செவிப்புலன்வழி முழங்கியும் அவள் உள்ளத்தைக் கலைத்தன.
முன்
தற்செயல் நற்பேறுகள் தனித்து வருவதில்லை என்று கூறப்படுவதுண்டு. யூஸ்டேஷியாவுக்கு இன்னும் ஒரு எதிர்பாராத வாய்ப்பு ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைதோறும் ஊர்ப்புற மக்கள் முகமூடியாட்டம் ஆடுவதுண்டு. இத்தடவை ஊர்ச் சிறுவர் அதன் பயிற்சிக்காக வழக்கம் போல மீசாமன் வையின் விறகுத்தொட்டியைக்கேட்டனர். கிறிஸ்துமஸன்று இவ்வாட்டம் கிளிம் வரவு காரணமாக அவன் இல்லத்தில் அவன் முன்னிலை யிலேயே ஆ IL ப்படவிருக்கிறது என்று கேட்டாள். பொதுவான காலங்களில் அவள் இத்தகைய ஊர்ப்புற ஆட்டங்களை மதித்ததில்லை. ஆனால் தன் உள்ளத்தின் ஆர்வங்களைக் காணும் வாய்ப்புக்காக அவள் துணிந்து சூழ்ச்சிக்கோட்டைகள் கட்டினாள்.