38
அப்பாத்துரையம் - 25
அவன் கல்வித் திட்டமும் எவர் எவர் ஆர்வத்தையும் எழுப்பவில்லை. பாரிஸ் பணியால் அவன் தன்னையும் உயர்த்தி ஊருக்கு மகிழ்ச்சியும் தந்து பெருமைப்படுத்தி இருக்கலாம். அத்தகையவன்தானா வெறும் பள்ளியாசிரியராவது என்று அவர்கள் சப்புக்கொட்டினர். கல்வித்துறையாளரைக் கிளிம் கலந்திருந்தால்கூட அவர்கள் அவன் திட்டத்தில் ஆர்வங் கொண்டிருக்கமாட்டார்கள். அதற்கான சூழ்நிலை புதர்நிலத்தி லில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள். அங்குள்ள வாழ்வுநிலையில் கல்வி தேவைப்படாது; பயன்தராது. ஏனென்றால் கல்விகற்றவர் அதனைப் பயன்படுத்தும் புதுத் துறைகள் அங்கு ஏற்படவில்லை. அதுமட்டுமன்று. கற்றவர்கள் பழய துறைகளுக்குத் தகாதவராகவும் ஆய்விடுவர். கிளிம் இதுபற்றிச் சிந்திக்கவேயில்லை. அவன் வாழ்வில் பொருளியல் சிக்கலில்லை. கல்வி அவனுக்கு முன்னேற்றத்துக்கோ, தனிமனிதன் வாழ்க்கை நிலை உயர்வுக்கோ உரிய ஒரு செய்தியில்லை. அது அவன் கண்ட உயர்வாழ்விலிருந்து அவனுக்குக் கிட்டிய ஒரு சொகுசுக் குறிக்கோள் மட்டுமே.
திருமதி யோப்ரைட்டிடம் ஒருநாள் கிளிம் தன் திட்டத்தைக் கூறினான். அவள் அதை விரும்பவில்லை. “இவ்வளவு பாடுபட்டு உனக்குக் கிடைத்த வாழ்க்கைப் படியை நீ உதறிவிடுவது நல்லதல்ல. உன் கருத்துக்கள் உன் நல்லெண்ணத்தைக் காட்டு கின்றன என்பதில் ஐயமில்லை. நல்லெண்ணங்கள்மட்டும் காரியத்துக்குப் பயன்படமாட்டா. இது உன் துறையல்ல. இதில் இறங்கினால் நீ கேடடைவது உறுதி” என்றாள்.
தாயின் முடிவு மகனை உறுத்திற்று. ஆனால் அவன் தன் முடிவில் உறுதியாக நின்றான். தாயும் அவள் முடிவில் உறுதி யாகவே இருந்ததை அவள் தோற்றம் காட்டிற்று. அன்பிணைப் புடைய இருவரும் இது முதல் கருத்து வேறுபட்டால் தொடர்பு அற்றவர் போலாயினர். தாய் மகன் உறவு தவிர மற்றவை அற்றன.
ரு
தாய்மகன் உறவைக்கூடப் பாதிக்கும் மற்றொரு தொடர்பு கிளிம் வாழ்வில் விரைவில் உருவாயிற்று. அது அவன் உயர்கருத்துகளுடன் மோதி அவற்றையும் தகர்க்கப் போதியதாயிருந்தது.