தாயகத்தின் அழைப்பு
49
மதிப்பையும் கெடுப்பதுகண்டு யூஸ்டேஷிர புழுங்கினாள் அவன் காதல் வாழ்வு அவளுக்கு முற்றிலும் கசப்பாயிற்று. அவள் தான் முன்வெறுத்த புதர்நில மக்களுடன்கூடத் தொடர்புகொண்டு தெருக்கூத்து, ஆடல் ஆகியவற்றில் பங்குகொள்ளத் துணிந்தாள். இதில் முதல் இடத்திலேயே மற்றவர்கள் அவளை அறியா விட்டாலும் வில்டீவ் அறிந்து உடன் ஆடினான். அவனுடன் தொடர்பு புதுப்பித்து அவனுடன் மீண்டாள்.
டிக்கரிவென் இதைப் பார்த்துவிட்டான். மணவினையில் ஈடுபட்ட பின்பும் இருவரும் தகாக்காதல் கொள்வதாக எண்ணினான். தன் உள்ளத்தின் தெய்வமான தாம்ஸினின் குடும்ப வாழ்வை யூஸ்டேஷியா கெடுப்பதாக எண்ணி, மேலும் தாம்ஸினுக்கு உதவியாக ஒற்றுக் கேட்டல், மறைந்து செயலாற்றுதல் தொடங்கினான். தாம்ஸினிடம் சென்று தான் கண்ட காட்சியைக் கூறினான். அவள் பேச்சால் அவள் மண வாழ்வு மணவாழ்வாயில்லை என்பதையும் அறிந்து கொண்டான்.
தான் யூஸ்டேஷியாவைச் சந்திப்பது தன் மனைவிக்கு எப்படியோ தெரிந்துவிட்டதென அவள் பேச்சுக் குறிப்புக் களாலும் நடையாலும் வில்டீவ் கண்டுகொண்டான். அத்துடன் யூஸ்டேஷியா வீட்டுவழி இரவில் போகும்போதெல்லாம் வழியில் புதர்முடிச்சுக்கள் தன்னைத் தடுக்கி விழவைப்பதைக் கவனித்தான். தாம்ஸினின் பழயகாதல் நண்பன் டிக்கரி செயல் இதுவென அவனும் உணர்ந்து கொண்டான். இத்தடங்கல் யூஸ்டேஷியாவுடன் அவன் தொடர்புகொள்வதை நிறுத்து வதற்கு மாறாக ஊக்கிற்று. அவன் பகலிலேயே அவளைக் காணவிரும்பினான். கிளிம் இருந்தபோதும் நட்பையும் தன் உறவுத் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் குடும்ப நண்பனாகத் தொடர்பு கொள்ள எண்ணினான்.
குடும்பத்தில் பிளவும் தப்பெண்ணமும் ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர் மதிகள் யாவும் திரிந்து அவர்கள் தலைவிதிகள் ஆகப் பின்னப்பட்டு விடுகின்றன. புதிர்முடிச்சுக்கள் இரவில் நடப்பவன் கால் விதியாவது போல், வாழ்வில் அன்பின் பாதையில் இத்தலைமதியின் முடிச்சு தலைவிதியாகிறது. கிளிம் நாள்தோறும் தன் தாய் வருவாள் என்று காத்திருந்தான். அவள் வராதது கண்டு, இனி னி தன்மனைவியுடன் தாய் வீடு சென்று று