பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

--

அப்பாத்துரையம் - 25

மன்னிப்புப்பெற எண்ணினான். அதற்குள் அவனுக்காகக் காத்திருந்த திருமதி யோப்ரைட்டிடம் டிக்கிரி சென்று கிளிம்மை அவளே சென்று பார்ப்பது நலம் என்று கூறினான். தாய் உள்ளமும் இதனை உவந்து ஏற்றது. அவள் புறப்பட்டாள்.

என்றும் நடந்தறியாதவள். தள்ளாத வயது. புதர்க்காட்டு வழி நீளமும் அறியாமல், வெய்யில் தாங்காமல் அவள் நொந்தாள். வழியில் புல்வெட்டுபவன் ஒருவனைத் தொலைவில் கண்டாள். அவனிடம் கேட்கத் தொடர்ந்தாள். புல்வெட்டு பவனிடம் கேட்க, "முன் செல்பவன் கிளிம் வீடுதான் செல்கிறான், பின் பற்றிப்போ” என்றான் பாவம், அவன் தான் கிளிம்! இது அவளுக்குத் தெரியாது. அவனைப் பின்பற்றி வீட்டில் அவன் நுழைந்தபோது தான் அது கிளிம் என்று அறிந்தாள். அவளால் நடக்க முடியவில்லை. வீடு எதிரே தான் தெரிந்தது. வழியில் சூசன்பிள்ளை இருந்தது. அதன் உதவிகோரித் தட்டுத்தடுமாறி வீட்டுவாயிற்படி அடைந்தாள். அதற்குள் அது சாத்தப் பட்டிருந்தது. அவள் தட்டினாள். தன் வலுவற்ற கையினால் மீட்டும் தட்டினாள். 'கிளிம், கிளிம்' என்று கூப்பிட்டாள். ஓசை காணவில்லை.

உள்ளே சென்ற கிளிம் வேலையயர்வால் உடைமாற்றாமல் வெளிக்கூடத்திலேயே சாய்ந்து அயர்ந்து தூங்கினான். அவனை அந்நிலையில் யாரும் காணாதிருக்க வேண்டி யூஸ்டேஷியா கதவைச் சார்த்தியிருந்தாள். ஆனால் திருமதி யோப்ரைட் வந்து சேருவதற்குச் சற்று முன்பே வில்டீவ் கதவைத் தட்டி உள்ளே நுழைந்திருந்தான். முன்னைய காரணத்திற்காக அவள் மீட்டும் கதவைச்சார்த்தியிருந்தாள். கிளிம் படுத்திருந்த கோரமும் யூஸ்டேஷியா நிலையும் கண்டு, இது தக்க சமயம் என்று வில்டீவ் பேச்சுக் கொடுத்து அவள் வாழ்வின் வெறுப்பைத் தன்மீது பாடமாகத் திருப்பிக்கொண்டிருந்தான்.

இந்தச் சமயம் திருமதி யோப்ரைட் கதவு தட்டவே யூஸ்டேஷியா நடுங்கி யார் என்று பலகணி திறந்து பார்த்தாள். தன் மாமியென்று அறிந்ததும் மீண்டும் நடுங்கினாள். வில்டீவுடன் தன்னை அவள் காணாதிருக்கவேண்டும் என்று எண்ணி 'கிளிம்மே வந்து திறக்கட்டும்' என்ற எண்ணத்துடன் வில்டீவுடன் பின்கட்டுக்குச் சென்றாள். வில்டீவுடன் சிறிது