பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

66

53

எட்டிப் பார்த்துப்பின் சென்றதும் யாவும் கூறிற்று. எப்போதும் யூஸ்டேஷியாவைப் பழித்த சூசனும் 'சூனியக்காரியை அழகுக்காக மணந்த நீங்கள் வேறு எந்நிலைதான் அடைய முடியும்?" என்றாள்.

கோபவெறியுடன் வந்தான் கிளிம். அவளிடம் உண்மையைக் கூறி “ஏன் என்னிடம் இத்தனை பொய்மை?" என்றான். அவள் உள்ளம் இதற்குள் பாரிஸ், வில்டீவ், நூறாயிரம் பொன் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது. கணவனை அவள் எதிர்க்க விரும்பவில்லை. ஆனால் வெறுப்பு அவள் பாதையைத் தடுத்தது. அவள் தன் பிழையை ஒத்துக் கொண்டாள். பணியவில்லை. அவன் கோபம் அவளை வெளியேற்றியது. கிளிம், நோய் வாய்ப்பட்ட கிளிம், தாயிழந்து தவித்த கிளிம், மனைவியையும் வெளியேற்றித் தன்னந்தனியனாய் வீட்டிலமர்ந்தான்.

யூஸ்டேஷியா பாட்டன் வீடு சென்றாள். அது பூட்டிக் கிடந்தது. ஆனால் முன் அவளைப் பூசித்து வந்த சார்லி புறக்கடை யேறிச் சென்று கதவு திறந்தான். பாட்டன் துப்பாக்கிகளைக் கொண்டு அவள் தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணினாள். அவன் அவற்றை அப்புறப்படுத்தி அவள் உயிரைக் காத்தான். பாட்டன் வந்தபோது அவள் நிலை கண்டு இரங்கினான். ஆனால் தன் முழு நிலையையும் அவள் அவனுக்குக் கூறவில்லை. வில்டீவ் மட்டும் அடிக்கடி வராவிட்டால் அவள் உள்ளம் வெடித்திருக்கும். தான் வெளி நாடு சென்றுவிட உதவும்படி மட்டும் அவள் அவனிடம் கேட்டிருந்தாள். அவன் தாம்ஸினை விட்டு அவளுடன் வரவிரும்பினான். அவள் இணங்கவில்லை. ஆகவே பட்மத் வரை வந்து வழியனுப்ப அவன் ஒத்துக்கொண்டான். ஆனால் உள்ளுற, பட்மத் வந்தபின் அவளை இணங்க வைத்து, உடன் செல்லவே அவன் எண்ணினான்.

அவர்கள் செல்லவிருந்த அன்று கிளிம் யூஸ்டேஷியா வுக்குக் கடிதம் எழுதியிருந்தான். அவள் வருவாள் என்று காத்திருந்து அலுத்தான். தாய் வகையில் பிடிவாதத்தாலும் காலங்கடத்துதலாலும் நேர்ந்த இடரெண்ணி அவன் தானே பணிந்து அவளை மீண்டும் வருமாறு கடிதத்தில் வேண்டி யிருந்தான். கடிதம் வரும்போது இரவு நெடுநேரம் ஆனதால்