5. முடிவு
கிளிம் சில நாட்களில் பிழைத்தான். ஆனால் அவனுக்கு வாழ்க்கைமுழுதும் கசந்துவிட்டது. என்றும் அகத்துறவியான அவன் வாழ்வின்பம் முற்றும் துறந்து தன் பழய உயர் குறிக்கோள் ஒன்றையே உயிர்த் துடிப்பற்ற குறிக்கோளாக்கி வாழ்ந்தான்.
வில்டீவ் உடுப்பில் கொண்டுசென்ற பொருளகப் பத்திரங்கள் தண்ணீரில் நன்றாக ஊறிப்போயின. ஆயினும் அவை ஒவ்வொன்றாக மெதுவாகத் தணலின்மீதும் நிழல் சூட்டின் மீதும்பரப்பப்பட்டு உலர்த்தப்பட்டன. நீரிலிருந்து மீண்ட அப்பணம் போலவே இப்போது அதற்குரிமையாளரான தாம்ஸினின் வாழ்வும் மெல்லத் துயர்க்கடலிலிருந்து மீண்டது.
டிக்கரிவென்இப்புயலிடையே
மாறாவடமீனாய்
தாம்ஸினின் உண்மை நண்பனாயிருந்து வந்தான். அவன் இப்போது தன் காவித்தொழிலையும் சிவப்புடையையும் மாற்றிவிட்டான். சில நாட்களுக்குள் அவன் மேனியின் சிவப்புச் சாயமும் மாறிற்று. அவன் படிப்படியாகத் தாம்ஸினுடன் நட்பு புதுப்பித்துக் காதலுரிமை கோரினான். கிளிம்மிடம் தாம்ஸின் இதுபற்றிக் கருத்துரை கோரினாள். மாண்டுபோன அத்தையின் விருப்பத்தை அவனிடம் முதலில் கூறி, தன்னை அடையும் எண்ணமிருந்தால், அத்தை விருப்பத்தை மதித்தே தான் நடக்க
ருப்பதாகக் கூறினாள். ஆனால் கிளிம் தான் உடல் பிழைத்திருப்பதன்றி, உள்ளம் பிழைத்திருக்கவில்லை என்று கூறி மறுத்தான். டிக்கரியின் உறுதியைப் பாராட்டி அவன் காதலை ஆதரித்தான்
தாம்ஸினின் சிறு குழந்தை யூஸ்டேஷியா, பழைய யூஸ்டேஷியாவின் நினைவுக்குறியாகக்கிளிம்மினால் வளர்க்கப் பெற்றாள். அவன் குறிக்கோளில் ஒத்துழைக்க வேண்டிய