ஆசிரியர்
ய
19-ஆம் நூற்றாண்டின் எல்லைக்கடந்து இருபதாம் நூற்றாண்டிலும் பெருவாழ்வு வாழ்ந்த முந்திய நூற்றாண்டின் இலக்கியப் பெருமக்களுள் ஒருவர் தாமஸ் ஹார்டி. அவர் மறைந்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்போது தான் மறைந்ததென்று மக்கள் கருதினர்.1840-இல் பிறந்த அவர் 1928-இல் உயிர் நீத்தார்.
புனைகதைத் துறையில் அவர் ஒப்புயர்வற்றவர். டிக்கன்ஸ், தாக்கரே என்ற நடு நூற்றாண்டுப் பெரியவர் போலவே, பின் நூற்றாண்டுப் பிற்பகுதியிலும் மெரிடித், ஹார்டி என இருவரும் இணைதுணையாய் விளங்கினர். வால்ட்டர் ஸ்காட் ஸ்காட் லந்தையும் இங்கிலாந்தின் எல்லைப்புறத்தையும் சித்தரித்து அதன் பெருங்காப்பியங்களாகத் தம் புனைகதைகளைத் தீட்டியதுபோல், ஹார்டி தம் கதைகளனைத்தையும் வெஸ்ஸெக்ஸ் நாட்டுப்புற வாழ்வின் பெருங்காவியமாக்கினார். சிற்றூர் வாழ்வு, சிறப்பாகப் பெண்கள் உள்ளத்தின் சஞ்சலங்கள், அதனால் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதில் அவர் வல்லவர்.
தாயகத்தின் அழைப்பு, (Return of The Native) மதிகறக்கும் மக்கள் திரளுக்கு அப்பால், (Far From Madly Crowd) டெஸ்டர்பர் வில், பசுமரக் காவினடியில் (Under The Greenwood Tree) என்பன அவர் தலைசிறந்த புனைகதைகள்.
வாழ்க்கையின் ஒரு பகுதியை, ஒரு நாட்டின் தனிப் பின்னணி யுடன், ஒரு தனிப்பண்பைக் குறுகிநுணுகி ஆய்ந்து தீட்டி, ஒரு தனித்துறையின் முடிசூடா மன்னனாய் விளங்கியவர் ஹார்டி. டிக்கன்ஸ் விட்ட பகுதியைத் தாக்கரே, ஷெல்லி விட்டபகுதியைக்