பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. காதல் மயக்கம்

சதாசிவனுக்கு இரண்டு ஆண்மக்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள் உண்டு. அவன் மணமான நாளிலிருந்து குடும்பப் பொறுப்பை மகிழ்ச்சியுடனேற்று மனைவி மக்களிடம் பற்றுதலுடையவனாகவேயிருந்தான். ஆனால் நாற்பதாவது வயதில் அவன் மனப்போக்கில் ஒருவகை மாறுதல் ஏற்பட்டது.

அவன் யசோதையை மணம் செய்யும்போது அவனுக்கு வயது பதினெட்டு. அவளுக்குப் பதினொன்று. அவர்கள் திருமணம் உறுதியாகும் வகையில் அவர்களிருவருக்குமே எதுவும் தெரியாது. அவர்களைக் கலக்காமலே தாய்தந்தையர் அவர்களை வாழ்க்கைத் துணைவராக்கி விட்டனர். அவர்களும் வைத்த இடத்தில் வைத்தபடி இருந்து, தாய்தந்தையர் எதிர் பார்த்தபடி நடந்து ஒருவருடனொருவர் நேசமாக உறவாடினர்.

ளமைமணம் பொருத்தமற்றதென்ற எண்ணம் அவர் களில் எவருக்கும் கனவில்கூட எழவில்லை. ‘அத்திருமணம் தன் விருப்பத்தால் ஏற்பட்டதன்று; பிறர் விருப்பத்துக்கு நாம் பலி யிடப்பட்டோம்' என்பதும் அவர்களுக்குப் புதுமையானதாகத் தோன்றவில்லை. அது போலவே மணமானவர் காதலி லீடுபடும் வகையில் எந்த நூலையும் வாசிக்காமலும் எதையும் பிறர் போதிக்காமலும் எப்படியோ வாழ்க்கைத் தேரை அவர்கள் நடத்திக்கொண்டுதான் சென்றனர்.

அவர்களிருவரும் இயற்கையாகவே தம் பெரியோரைப் பின்பற்றிச் சமயப்பற்றுடையவராய் இருந்தனர். அச் சமயம் பற்றிய ஆராய்ச்சியும் அவர்களிடம் எழவில்லை. 'சமயம் என்பது அறிவை மயக்கும் அபினி' என்ற குற்றச்சாட்டையோ அவர்கள் கேள்விப்பட்டதில்லை.