பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

||-

அப்பாத்துரையம் - 25

ஆனால், சதாசிவன் திறவு கோலைக் கொடுக்கும் போது அவள் அவன் கையிலிருந்த வைர மோதிரத்தை மெள்ளக் கழற்றி எடுத்துக் கொண்டு “உங்கள் நினைவாக இதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றாள்.

அவன் வியப்படைந்து மறுமொழிகூற வாயெடுக்குமுன் தாய் வந்து ஆனந்தியை அழைத்துச் சென்றாள். சதாசிவன் “என் மோதிரத்தைக் கொடுத்துவிட்டுப் போ” என்றான்.

ஆனந்தி: நான் இழந்த கற்பிற்கு இது விலை.

து

சதா: உனக்கு ஏது கற்பு இருந்தது இதுவரை?

ஆனந்தி: உங்களுக்கு எவ்வளவு நிறை இருந்ததோ அவ்வளவு கற்பு எனக்கும் இருந்தது.

சதா: அதற்குச் சரியான விலையை நான் தந்து விடுகிறேன். மோதிரத்தைக் கொடு. அது என் மனைவியின் நினைவுக்குறி.

ஆனந்தி: மனைவியின் நினைவு என் நினைவைவிட உங்களுக்குப் பெரிதாய்விட்டதோ?

சதா: கேடு கெட்ட மனைவிகூட மதிப்பில் பெரிய பொது மகளிரை விட உயர்வானவள் என்பதை அறிந்து கொண்டேன்.

சதாசிவன் ஐந்து பத்து ரூபாய்த்தாளைத் தர எண்ணி இருந்தான். ஆனால் அவர்கள் பிடிவாதத்தாலும், பயமுறுத்த லாலும், நூறு ரூபாய்களை எறிந்து விட்டு மோதிரத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் காதல் பற்றிய கட்டுரைகள், வெளியீடுகள் ஆகியவை சதாசிவன் அறையில் கொளுத்தப்பட்டுக் கிடந்தது கண்டு யசோதை அவன் மனமாற்றத்தை யறிந்தாள். அவளாக அவனையண்டி நடந்த யாவையும் கேட்டு மனமாற அவனைப் பாராட்டினாள்.

காதலைப்பற்றி அவன் ஒரு நாள் அவளிடம் பேசுகையில், அவள் அவன் மனத்தில் காதல் வெளியீடுகளால் ஏற்பட்டிருந்த ஓர் ஐயத்தை அவள் தீர்த்தாள். “மணமாகும் வரை காதலர் காதல் அவர்களிடையே தவழும். மணமானபின் கணவன் மனைவி ஆகிய இருவர் காதலும் வாழ்க்கை நோக்கி வளரும். பிள்ளை