பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 26

குமரிமுனையின் பக்கத்தில் ஏதோ ஓரிடத்தில் இருந்ததாகத் தெரிகிறது.38 பாண்டிய அரசன் தன்னை ஒரு மாறன் என்றும் மீனவர்கோன் அல்லது மீனவரின் அரசன் என்றும் குறித்துக் கொண்டான். மாறன் என்ற இப்பெயர் கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன் பர்மாவைவென்ற 'ம்ரான்மர்3” என்ற மரபே என்று கூறத்தகும். பாளியில் எழுதப்பட்ட பர்மிய வரலாறுகளில் அந்நாடு மாரம்ம தேசம்" என்றே அழைக்கப்படுகிறது.

தமிழினப் படையெடுப்பாளரின் அடுத்த மரபு திரையர் அல்லது கடலரசர் ஆகும். அவர்கள் ஒரு பெருங்கடலோடி இனம். அவர்கள் தாயகம் வங்கத் தாழ்நிலம் என்று தோற்றுகிறது. அவர்கள் கடல் வழியாக பர்மா, கொச்சின்சீனா, இலங்கை, தென்இந்தியா ஆகிய இடங்களில் பரவினர். இம்மரபின் அரசருள் ஒருவன் கரிகால சோழன் சமகாலத்தவனாக, காஞ்சி அல்லது தற்காலக் காஞ்சிபுரத்தில் திரையன் என்ற பெயருடன் ஆண்டான். இந்து புராண கதையின் படி ஆழியில் பள்ளிகொண்ட திருமாலின் வழிவந்தவனென்று அவன் உரிமை கொண்டாடினான்.

41

சோழ அரசர்களும் இதே மரபுக்குரியவர்களே. தாம் கதிரவன் மரபினர் என்று அவர்கள் பெருமை கூறிக்கொண்டது இந்த அடிப்படையிலேயே. கி.பி.முதல் நூற்றாண்டுக்குரிய தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்ட சோழ அரசர்களில் மிகப் பழமை யானவன் முசுகுந்தன். இந்திரன் தலைநகரமான அமராவதியை அசுரர்கள் முற்றுகையிட்டபோது, அவன் அதைக் காத்ததாகவும்; அந்நன்றிக்குக் கைம்மாறாக இந்திரன் அவனுடன் அனுப்பி வைத்த ஐந்து பூதங்களின் உதவியால், அவன் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள நாகர்களைக் கொன்று அந்நகரைக் கைப்பற்றினானென்றும் அறிகிறோம்.2

வெற்றிபெற்ற தமிழர் அந் நகருக்குச் சம்பாபதி என்று பெயரிட்டனர். இது பெரும்பாலும் அவர்கள் முதலில் தங்கியிருந்து வெளியேறிய டமான (தற்கால பகல்பூர் நகருக்கு அருகாமையில் அமைந்திருந்த, வங்கத்தின் பண்டைத் தலைநகரான) சம்பா நகரின் பெயரைப் பின்பற்றி எழுந்த வழக்காகவே இருக்கக்கூடும்.