பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

85

சொற்களைக் கடன்பெறாமலே நன்கு வளரத்தக்க சொல்வளமும், சொல்திட்பமும், உடையதாயிருக்கிறது. உண்மையில் பண்டைய இலக்கிய ஏடுகளிலே, இசை, இலக்கணம், வானூல் ஆகியவை மட்டுமன்றி, உயர் கருத்தியல் விளக்கத் துறைகள் சார்ந்த சொற்கள்கூடத் தூய தனித்தமிழ்ச் சொற்களாய் இயல்கின்றன. பார்ப்பனரோ மற்ற ஆரியக் குடியேற்றத்தாரோ வருவதற்கு நெடுநாள் முன்னரே இந்த நூல்துறைகள் தமிழரால் பேணி வளர்க்கப்பட்டன என்பதை இது காட்டுகிறது. இந்த உயர் துறையறிவுகளைத் தமிழர் பெரும்பாலும் வங்காள மூலமோ, பர்மா மூலமோ சீனாவிலிருந்து பெற்றிருக்கக் கூடும். ஏனெனில் வங்கம், பர்மா ஆகிய இருநாடுகளுடனும் தமிழர் நேரடியான தொடர்பு கொண்டிருந்தனர்.

மற்றத் திராவிட மொழிகளைப் போலன்றித் தமிழ் மொழி ங, ஞ, ண ஆகிய மெல்லொலிகள் அல்லது மூக்கியல் ஒலிகளை மிகுதியும் பயன்படுத்துகிறது. இச்சிறப்புப் பண்டைத் தமிழ் நூல்களுக்கும் உண்டு; இன்றைய மலையாளத்துக்கும் உண்டு. பர்மியருடனும், சீனருடனும் தமிழர் உறவுடையவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பண்டைச் சேரரைப் போலவே சீனரும் தங்களை வானவர் அல்லது வானகத்துக் குரியவர் என்று பெருமையாகக் கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் குடியேற்றத்தார் தென் இந்தியாவில் குடியேறிச் சிலகாலம் வரை பேசிவந்த மொழியையே தற்கால மலையாளம் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். அவர்கள் அச்சமயம் திராவிடச் சொற்களையே கற்றுக் கொண்டிருந்தார்கள். திணைபாலிடம் குறித்த வினைவிகுதிகளைப் பழகிக்கொள்ள வில்லை. இந்த வடிவில் இன்றைய மலையாளம் மங்கோலிய, மஞ்சு மொழிகளையும் ஆசிய மேட்டு நிலத்தின் பிறமொழி களையும் ஒத்துள்ளது.

குமரிமுனை யருகிலுள்ள பொதிய மலைக்கு ஆரியரின் முதல் குடியினரை அகத்தியரே தலைவராக நடத்தி வந்தார் என்ற மரபை முற்காலத் தமிழ்க் கவிஞர் நம்பி ஏற்றனர். இம்மரபில் எந்த அளவு வரலாற்றுத் தொடர்பு இருக்கிறது என்று துணிவது முடியாது. அம்மரபுக்கு இராமாயணம் ஒன்றே ஆதாரம் என்று தோன்றுகிறது. அதில் இலங்கை இராவணனை வெல்லும்படி