பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 26

70

அகத்தியரே இராமனை வரவழைத்தாகக் குறிப்பிடப்படுகிறது. அதே நூலில் அகத்தியரின் திருமனை பஞ்சவடியிலிருந்து ரண்டு யோசனை தொலைவில் இருந்ததாகவும் அறிகிறோம். பஞ்சவடி என்பது கோதாவரிக் கரையிலுள்ள தற்கால நாசிக் ஆகும். இதிலிருந்தே வால்மீகியின் காலத்தில் அகத்தியரின் திருமனை தற்கால நாசிக்குக்கு அருகே இருந்ததாக நம்பப்பட்டதென்று தோற்றுகிறது.

தண்டகாரணியமென்பது தற்கால மராட்டிய நாடு, பார்ப்ப னர்களின் சமய வினைகளுக்குத் தொல்லை கொடுத்த காட்டுக் குடிமக்கள் நிரம்பிய இடமென்று அது வருணிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவிரிக்குத் தெற்கிலுள்ள பகுதி ஜனஸ்தானம் அதாவது நாகரிக மக்கள் வாழ்ந்த நாடு என்று குறிக்கப்பட்டுள்ளது.

சீதையைத் தேடிக் குரங்கு வீரர்கள் அனுப்பப்பட்டனர். இதை வருணிக்கும் பகுதியில், அவர்கள் ஆந்திர நாட்டுக்கும் தெற்கே பாண்டியர், சோழர், கேரளர் நாடுகளுக்கும் செல்லும்படி ஏவப்படுகின்றனர். இவை கடந்தால் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட பாண்டியரின் நகர் வாயிலை அணூகலாம் என்று கூறப்படுகிறது." இராமணய ராமணயத்திலுள்ள இந்த வருணனைகளி லிருந்து வால்மீகி காலத்தில், ஆரியர்கள் தமிழ் மக்களை ஓரளவு அறிந்திருந்தனரென்றும், அவர்களை ஒரு நாகரிகம் வாய்ந்த இனத்தவராகவே கொண்டிருந்தனர் என்றும், பாண்டியர் தலைநகர் செல்வ மோங்கிய நகரம் என்று அவர்கள் பாராட்டியிருந்தனர் என்றும் நமக்குத் தெரிய வருகிறது.

காத்யாயனர் என்ற மற்றோர் ஆசிரியர் பாணினி இயற்றிய இலக்கணச் சூத்திரங்களுக்கு விளக்கமாக உரைச் சூத்திரங்கள் இயற்றினார். பொதுவாக அவர் நந்தர்கள் காலத்தில், அதாவது கி.மு.நான்காம் நூற்றாண்டில் முற்பாதியில் இருந்ததாகக் கருதப் பெறுகிறார். அவர் பாண்டியரையும் சோழரையும் குறிப்பிடு கிறார். அத்துடன் பாண்டு மரபினரில் ஒருவரிடமிருந்து தோன்றிய கிளை மரபினர் அல்லது அம்மரபினர்களின் நாட்டார் பாண்டியர் எனப்படுவர் என விதி வகுத்தார்?2

இக்காரணங்களால் இந்தியாவின் தெற்கில் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கு நெடுநாள் முன்னரே பாண்டியர் ஆட்சி நிறுவப் பட்டு விட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தென்பாண்டி