பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 26

1,50,000 (ஒரு இலக்கத்து ஐம்பதாயிரம் அதாவது ஒன்றறை இலக்கம்) காலாள் வீரரும், 500 யானைகளும் உள்ளன.”79

பண்டைத் தமிழ் நூல்களும் இம் மரபை ஆதரிப்பனவாகவே தோற்றுகின்றன. ஏனெனில் பாண்டிய மரபைத் தோற்றுவித்தது ஒரு பெண்ணே என அவை குறிப்பிடுகின்றன.8 பின்னாட்களில் அவள் மதுரையில் ஒரு பெண் தெய்வமாக வழிபடப்பட்டதாகத் தோற்றுகிறது. சிலப்பதிகாரத்தில் அவள் மதுராபதி அல்லது 'மதுரையரசி' என்று சுட்டப்படுகிறாள். அவள் பாதி வீரனாகவும் பாதி அரசியாகவும் தோற்றமளிக்கிறாள். மணிமேகலையும் அவளை மதுராபதி என்றே சுட்டுகிறது.82

81

மெகாஸ்தெனிஸும் பிளினியும் தரும் இம் மரபுகளையும் தமிழ் நூல்களின் குறிப்புகளையும் ஒருங்கே இணைத்துப் பார்த்தால், கீழ்வரும் முடிவுக்கு நாம் வரலாம் என்று தோற்றுகிறது. யமுனைக் கரையிலுள்ள மதுரையில் பாண்டு மரபினர் ஆண்டு வந்தனர்.83 அம்மரபைச் சார்ந்த ஓர் இளவரசி ஒரு குடியெழுச்சியை நடத்தி வந்து வைகைக்கரையில் மதுரையை நிறுவினாள். ஃவினிஷியாவி லிருந்து தப்பியோடிக் கார்தேஜ் நகருக்குக் கால்கோள் செய்த டிடோவைப் போல, 4 குடும்பத் தொல்லைகளால் துரத்தப்பட்டு அவள் தொலை நாட்டுக்கு வந்திருக்கவேண்டும்.

பிற்கால மரபுரைகள் இவ்வரசி முத்திற மார்பகங்களுடன் பிறந்ததாகக் குறிக்கின்றன.85 இவ்வுடல் கோளாற்றின் பயனாகவே அவள் அயல்நாடுகளில் கணவனைத்தேடும்படி நேர்ந்திருக்கக் கூடும். அவள் ஏற்கெனவே தமிழகத்தில் குடியேறியிருந்த மாறர் குடிமன்னனொருவனை மணந்ததாகவும், அவள் மரபினர் பாண்டியன், மாறன் என்ற இரு குடிப்பெயர்களுக்கும் உரியவர்களாக விளங்கினர் என்றும் தோற்றுகிறது.

பாண்டிய அரசியுடன் வந்ததாகத் தெரிகிற ஒரு சில ஆரியர்கள் தமிழ் மக்களுடன் கலப்பு மண உறவுகொண்டு கலந்து விட்டனர் என்று தோன்றுகிறது. கி.பி. ஒன்றாம், இரண்டாம் நூறாண்டு களுக்குரிய பாண்டிய அரசர்கள் தாம் பாண்டுவின் மரபினர் என்று உரிமை கோரத் தவறவில்லையானாலும் தம்மை ஆரியர் என்று கொண்டதேயில்லை. தமிழர் என்றுதான்