ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
91
வினைமுறைகளுக்கும் சமூக வினை முறைகளுக்கும் உரிய நல்லோரைகளைத் திட்டப்படுதியும் வந்தனர்.
ஆயர் அல்லது மேய்ச்சல் நில இனத்தவர் மேற்கூறிய னங்கள் எல்லாவற்றிலிருந்தும் வேறு பட்டவர்கள். ஆயர் என்னும் பெயர் ஆவினம் என்று பொருள் படும் ‘ஆ’ என்ற திராவிடச் சொல்லிருந்து தோன்றியதே. புராண வரலாற்றில் அவர்கள் ஆபீரர் என்று வழங்குகின்றனர். வட இந்தியாவில் அவர்கள் இன்னும் ஆஹிர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அவர்கள் பொதுவர் அல்லது பொதுநில மக்கள் எனப்பட்டனர். பொது என்ற திராவிடச் சொல் நடுநிலையைக் குறிக்கும். தமிழர், நாகர் இருவருடனும் நட்புடையவராயிருந்த தனாலேயே அவர்களுக்கு இப்பெயர் வந்திருக்கக் கூடும். தொடக்கத்தில் சோழநாட்டில் அவர்கள் தமக்கெனச் சிறுசிறு குடிமன்னர்களை உடையவர்களா யிருந்ததாகத் தெரிகிறது. ஆனால்.கரிகாலன் அக்குடிமன்னர் மரபையே வேரோடு அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது!0
100
பாண்டி நாட்டிலுள்ள ஆயர்கள் பாண்டிய மரபின் முதல்வர்களுடன் தமிழகத்துக்கு வந்ததாக அவர்கள் மரபுரை கூறுகிறது01. பொதுவாக அவர்கள் இயக்கர்களை வழிபட் டார்கள்102. ஆயினும் அவர்கள் பெரும் பற்றுதலுக்குரிய தெய்வம் அவர்கள் குலமரபின் வீரனான கண்ணனே. மகாபாரதத்தில் விரித்துரைக்கப்பட்டபடி ஆய்க்குல நங்கையர்களுடன் அவன் கொண்ட திருவிளையாடல் தொடர்புகள் அவர்கள் விழாவின் ஆடல்பாடல்களுக்குரிய பொருளாயிருந்தன. மதுரையில் வாழ்ந்த ஆய்குலச் சிறுவரும் சிறுமியரும் கண்ணனாகவும், அவன் தமையனாகிய பலராம னாகவும், அவன் தாய் யசோதையாகவும், மனைவி பின்னையாகவும் நடித்து நடனமாடியதாகத் தீட்டப் பட்டுள்ளார்கள்!03. ஆய்மகளிர் கடைந்தெடுத்த வெண்ணெயைக் கண்ணன் திருடியது, அவர்கள் யமுனையில் குளித்து விளையாடிய போது அவன் அவர்கள் ஆடையை ஒளித்து வைத்தது முதலிய கண்ணன் பிள்ளை விளை யாட்டுக்கள் பற்றிய பழங் கதைகளெல்லாம் அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட செய்திகளாயிருந்தன.