ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
115
இது நமக்கு இறும்பூது தருவதாகும். பொது வாசகர்களுக்குச் சுவைபடாத பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, பாட்டின் மொழிபெயர்பைக் கீழே தருகிறேன்.!
66
18
விழாவயரும் நகரந்தொறும் சென்று, நகரில் விழா முடிந்ததும் அதை விட்டுச்செல்லும் பாணனே!"
“உன் மனைவி பெடைமயில்போலும் சாயலினள். அவள் குழல் நெய்தோய்ந்து கருமையுடையவை. அவள் நுதல் பிறைமதி ஒத்தது. கூற்றுவன் சிலைபோல் வளைந்த புருவத்தினடியிலே மென்மை வாய்ந்த கண்களை உடையவள் அவள். அவள் இதழ்கள் இலவின் பூவிதழ்கள் ஒத்தவை. அவள் குரல் இசை போன்றினியது. அவள் பற்கள் முத்துவரிசைபோன்றவை. மயிர் கத்திரிக்கும் கத்திரியின் பிடிபோன்று தொங்கும் காதணிகளை அணிந்தவள். நாணத்தினால் சற்றே வளைந்த கழுத்தினள். உயர் மலைகளின் உச்சியில் மலரும் செங்காந்தள் போன்ற மெல்விரல் களை உடையவள் அவள்...
“இத்தகைய உன் மனைவி யாழின் நரம்புகளை மென்மை யாகத் தொட்டும், தைவந்தும், விரைந்து, பயின்றும், இன்னிசை பாட, நீ திருநீர் தெளித்து வழிபட்டு வன தெய்வங்களைப் பூசித்தாய். நொந்து களைத்த காலுடன் நடக்கும் வழிப்போக் கருக்கு நிழலின்றி இலைதளையற்ற மரங்களை உடையதாய், காட்டு யானைகள் திரியும் காடுகள் வழியாகச் செல்லும் நீ இடையூறின்றிச் சென்று மீள வேண்டுமென்று வேண்டுதல் செய்தாய்"
"வாழி, பாணர்களில் சிறந்த பாணனே வாழி! உன் நற்பேறு உன்னை இங்கே கொண்டுவந்து விட்டது. இனி இத்தகைய ஈயாக் கடுவழிகளில் நீ செல்லவேண்டுவதில்லை. இனி நீ வாழ்வில் வளப்படுவாய்! ஏழு நரம்புகளை இயக்கும் திறலுடையவனே! உன்னையும் உன் குடும்பத்தையும் வாட்டி வதக்கிய வறுமையை நீ ஓட்டி ஒழிக்க விரும்புவாயானால், இன்னே எழுக!"
“பழுத்த கனி நிறைந்த மரங்களைப் பசியுடன் தேடும் பறவையைப் போல, நான் ஒருநாள் விடியற்கலையில் ஓர் அரசன் அரண்மனை வாயிலுக்கு சென்றேன். வாயில் காப்போரின் ணக்கம்பெற்றுச் சுணங்காமல் நேரடியாகவே உள்ளே