பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

அப்பாத்துரையம் - 26

புகழவாவுடைய நீ உன் படைவீட்டில் தங்குவது தவிர வேறு எங்கே செல்லமுடியும்?"

66

எதிரிகளின் கோட்டைமதில்களைத் தாக்கி முனை மழுங்கிய தந்தங்களையுடைய உன் யானைகள் வெறிதே சோம்பியிருக்க முடியாமல் படபடக்கின்றன. காலில் வீரக் கழல்களணிந்த உன் படைவீரர்கள் அகன்றடர்ந்த காடுகளைக் கடந்தேனும் எதிரிகள் நாட்டில் நுழைய இருக்கின்றனர். உன் போர்க்குதிரைகள் கீழ்கடலிலிருந்து புறப்பட்டு மேல் கடலில் தங்கள் குளம்புகளை அலம்பும்வரை நிற்பதில்லை. இதனால் துணக்குற்று நடுங்கி நீ தம்பக்கம் படை நடத்திவிடக் கூடுமென்று அஞ்சி, வடபுல அரசர்கள் கண்ணிமையாது விழித்திருந்து (தம் எல்லைகளைக்) காக்கின்றனர்.”

அவன் தலைநகரிலிருந்து அடிக்கடி வெளியே சென்று தங்கியிருந்ததனால், மன்னர் குடியின் இளையோர்மீது அவன் ஆற்றல் தளர்ந்திருந்ததாகத் தோற்றுகிறது. நெடுங்கிள்ளி என்ற சோழ இளவரசன் அவனுக்கெதிராகக் கிளர்ந்தெழும்படி தூண்டப் பட்டான். தலைநகரமாகிய உறையூறை அவன் கைப்பற்றிக் கொண்டான்.

இக் கிளர்ச்சி பற்றிக் கேள்வியுற்ற அரசன் உறையூருக்கு விரைந்து சென்று அதை முற்றுகைவிட்டான். முற்றுகையின் போது, இளந்தத்தன் என்ற ஒரு பாடற் புலவன் உறையூர் சென்றான். அவனை ஓர் ஒற்றன் என்று ஐயுற்று, நெடுங்கிள்ளி அவனைக் கைப்பற்றிக் கொலை செய்ய முனைந்திருந்தான். அச்சமயம் கோவூர்கிழார் என்ற புலவர் அவனிடம் சென்று இளந்தத்தன் உயிருக்கு மன்றாடி அவனைக் காத்தார்.

இத்தறுவாயில் கோவூர்கிழார் நெடுங்கிள்ளியை நோக்கிப் பாடிய பாடல் வருமாறு :23

"புலவர்கள் பறவைகளைப்போல எங்கும் பறப்பவர்கள். புரவலர்களை நாடிக் காடுகளைக் கடப்பவர்கள். நாவறிந்த அளவு அவர்களைப் புகழ்பவர்கள். பெற்ற பரிசில் கொண்டு மகிழ்ந்து. தம் உழையர்களுடன் விருந்து அயர்பவர்கள். மீத்துவைத்த லறியாது உண்பவர்கள். கொடுத்தலன்றிப் பேணல் அறியாதவர்கள். அவர்கள் அவாவுவது புகழன்றி வேறில்லை."